நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானின் தங்க மாதம்: தொழிலாளர் கட்டணம் குறைக்க தங்க வியாபாரிகளுக்கு அரசு அறிவுரை

கோத்தா பாரு: 

வரும் மாதம் நடைபெறவுள்ள ‘கிளந்தானின் தங்க மாதம்’ நிகழ்வை முன்னிட்டு,  தொழிலாளர் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என கிளந்தான் மாநில அரசு தங்க நகைக் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களையும் கிளந்தானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது என மாநில சுற்றுலா, கலாச்சாரம், கலை, பாரம்பரியக் குழுவின் தலைவர் டத்தோ கமருடின் முஹம்மத் நோர் தெரிவித்தார்.

“மார்ச் 1 முதல் 31 வரை முதன்முறையாக ‘கிளந்தானின் தங்க மாதம்’ நடத்தப்படுகிறது. இதன் மூலம் கிளந்தானில் தங்கத்தின் முக்கியத்துவத்தை விளம்பரப்படுத்துவதோடு, பொருளாதார பாதுகாப்புக்கான ஆதாரமாக தங்கத்தின் மதிப்பை மக்களுக்கு உணர்த்த விரும்புகிறோம்.

எனவே, இந்த மார்ச் மாதம் முழுவதும் தங்க வியாபாரிகள் சலுகைகள் வழங்கி, தொழிலாளர் கட்டணத்தை குறைத்து வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

கிளந்தான் மக்கள் துவக்கத்திலிருந்து தங்க நகைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றும், தங்கத்துடன் அவர்களுக்கு தனித்துவமான உறவு இருப்பதாகவும் அவர் கூறினார்.

“குழந்தை பிறப்பதற்கு முன்பே நகைகள் வாங்கும் பழக்கம் இங்கு உள்ளது,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தங்கத்தின் விலை உயர்ந்திருந்தாலும், இங்குள்ள நகைக் கடைகளில் விற்பனை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக சித்தி கதீஜா சந்தை பகுதியில் உள்ள கடைகளில் தினமும் ஆயிரக்கணக்கான ரிங்கிட் மதிப்பிலான விற்பனை நடைபெற்றாலும், அங்கு பாதுகாப்பு காவலர்களை பயன்படுத்தாமல் இயங்குவது இங்கு உள்ள தனித்துவம் என்றும் அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset