செய்திகள் மலேசியா
ரமலான் சந்தைகளில் வெளிநாட்டவர் செய்யும் வியாபாரம்: குடிநுழைவு துறை கண்காணிப்பு தீவிரம்
புத்ராஜெயா:
சில ரமலான் சந்தைகள் வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இத்தகைய செயல்பாடுகள் கண்காணிப்பில் உள்ளன என அதன் தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் கூறினார்.
சில வெளிநாட்டவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறிய அளவில் வணிகம் செய்து வருவதாக குடிநுழைவு துறையினது சோதனைகளில் அம்பலமானது.
மேலும், ஐக்கிய நாட்டின், அகதி ஆணையத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பவர்களும் இதில் ஈடுபட்டிருப்பதாக டத்தோ சகாரியா கூறினார்.
செல்லுபடியாகும் அட்டை கொண்டவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருப்பதால் அது ஒரு கட்டுப்பாடாக உள்ளது எனவும் விளக்கினார்.
ரமலான் மாதம் முழுவதும் சந்தைகளில் வணிகம் செய்கிற வெளிநாட்டவர்களைப் பற்றிய சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சில உள்ளூர் நபர்கள் சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தியதும் கண்டறியப்பட்டுள்ளது.
ரமலான் தொடங்கியதிலிருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 23 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 5:35 pm
டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார்
February 26, 2026, 5:32 pm
இயக்கவியல் தொழில்துறைக்கு ஏற்ப பட்டதாரிகளின் திறனை மேம்படுத்த மனிதவள அமைச்சு தீவிரம்: டத்தோஶ்ரீ ரமணன்
February 26, 2026, 4:47 pm
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வட்டாரக் கூட்டங்கள் பிப். 28 முதல் நடைபெறும்: டத்தோ சகாதேவன்
February 26, 2026, 4:36 pm
கிளந்தானில் இருந்து பலர் பாலினம் மாற்றினார்களா?: குற்றச்சாட்டை ஆய்வு செய்யும் அரசு
February 26, 2026, 4:33 pm
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு ஹரி ராயா பரிசு: குறைந்தபட்சம் RM1,000 வழங்க அரசு அறிவிப்பு
February 26, 2026, 4:28 pm
3ஆர் விவகாரம் பரவாமல் இருக்க பல்கலைக்கழக மாணவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 26, 2026, 2:36 pm
அமைதியும் முன்னேற்றமும் தான் மக்களின் விருப்பம்: அன்வார் இப்ராஹிம்
February 26, 2026, 1:05 pm
புக்கிட் பிந்தாங்கில் பரபரப்பு: தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் மோதலில் குடியேற்ற அதிகாரியின் கால் முறிவு
February 26, 2026, 1:03 pm
