நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார்

கோலாலம்பூர்:

லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தற்போதைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வார்.

அப்பதவிக்கு எந்த மாற்றமும் குறித்து நாடாளுமன்றத்தில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமர்ப்பிக்கப்படவில்லை.

தேசியக் கூட்டணி விப் தலைவர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் இதனை தெரிவித்தார்.

இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க இன்று மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ  ஜொஹாரி அப்துல்லாவை சந்தித்ததாகவும், ஹம்சாவின் நிலை குறித்து ஜொஹாரி முன்பு வெளியிட்ட அறிக்கையைக் குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார்.

இதுவரை டத்தோஸ்ரீ ஹம்சா இன்னும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.

அவரை டான்ஸ்ரீ ஜொஹாரி) ஏற்றுக் கொள்கிறார். நானும் (ஏற்கிறேன்).

இதுவரை, அதுதான் அவரது நிலைப்பாடு என்று அவர் இன்று மக்களவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset