செய்திகள் விளையாட்டு
மலேசிய கபடி அணிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும்: யுனேஸ்வரன்
கோலாலம்பூர்:
2025ஆம் ஆண்டு சீ விளையாட்டு போட்டியில் மலேசிய கபடி அணி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்தச் சாதனையைத் தொடர்ந்து, மலேசிய கபடி சங்கத் தலைவர் பீட்டர், தேசிய கபடி அணியின் நிர்வாகி, கபடி வீரர்கள், பயிற்றுனர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களைத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
கபடி வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில் துணையமைச்சர் நற்சான்றிதழ்கள், நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
கபடி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும். அதனைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.
இதற்காக கபடி விளையாட்டாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும்.
தற்போது பல இனங்கள், மொழிகள் மற்றும் கலாச்சார பின்னணியைக் கொண்ட இளைஞர்களை ஒரே மேடையில் இணைக்கும் திறன் கபடி விளையாட்டிற்கு இருப்பதாகவும், இது பரஸ்பர புரிதல், ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்றை வளர்க்கும் வலுவான கருவியாகச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் கபடியைத் தொழில்முறை ரீதியில் மேம்படுத்த சிறப்பு வசதியுடன் கூடிய கபடி அரங்கம் அமைக்க வேண்டும் என்ற மலேசிய கபடி சங்கத்தின் கோரிக்கையைக் குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்கத் தாம் தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார்.
மேலும், கபடி விளையாட்டை இந்திய சமூகத்தைத் தாண்டி அனைத்து இனங்களிடமும் கொண்டு சேர்க்க சமூக ஊடகங்களை வலுவாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அரசு தொடர்புடைய நிறுவனங்கள் (GLC) மற்றும் பொதுமக்கள் வழியாக நிதி ஆதரவைப் பெறும் முயற்சிகளை கபடி சங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, மலேசிய கபடி சங்கத் தலைவர் பீட்டர், தங்களின் சாதனைகளுக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், கபடி வீரர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவு அவர்களுக்குப் பெரும் ஊக்கமாக இருப்பதுடன், இது அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 3:37 pm
மலேசிய பூப்பந்து அணிக்கு லீ ஸீ ஜியாவின் அனுவம் மிக அவசியமாக தேவைப்படுகிறது
February 26, 2026, 11:26 am
சாம்பியன்ஸ் லீக்: முதல்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய நார்வே கிளப் அணி
February 26, 2026, 10:38 am
மலேசியக் கோப்பை: மலாக்காவை அரை இறுதி சுற்றில் மீண்டும் வீழ்த்தி ஜொகூர் தாருல் தஹ்சிம் அணி
February 25, 2026, 11:21 am
சாம்பியன்ஸ் லீக்: நியூகாஸில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
February 24, 2026, 11:43 am
இறுதிநேரத்தில் துல்லியமாக கோல் அடித்த பெஞ்சமின் செஸ்கோவை பாராட்டிய மைக்கேல் கேரிக்
February 23, 2026, 11:32 am
உடல்நலக்குறைவிலும் டுப்லாண்டிஸ் தனது 37வது வெற்றி கிண்ணத்தை பதிவு
February 22, 2026, 11:40 am
இறுதி நேர கோலால் மலாக்கா அணியை வீழ்த்திய திரெங்கானு அணி
February 21, 2026, 7:30 pm
FAM-இல் பெரும் மாற்றம்: பழைய நிர்வாகிகளுக்கு விரைவில் விடை
February 21, 2026, 7:25 pm
