நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசியக் கோப்பை: மலாக்காவை அரை இறுதி சுற்றில் மீண்டும் வீழ்த்தி ஜொகூர் தாருல் தஹ்சிம் அணி

மலாக்கா: 

மலேசியக் கோப்பை காலிறுதி இரண்டாம் சுற்றில் மலாக்கா அணியை 3–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜொகூர் தாருல் தஹ்சிம் அணி, அரை இறுதிக்கு எதிர்பார்ப்பை நிறைவேற்றி முன்னேறியது. இந்தப் போட்டி ஹாங் ஜெபட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

முதல் சுற்றில் 5–0 என வெற்றி பெற்றிருந்த ஜொகூர் அணி, மொத்தமாக 8–1 என்ற கோல் கணக்கில் தனது வெற்றியை உறுதிப்படுத்தியது.

போட்டியின் ஏழாவது நிமிடத்திலேயே பாதுகாப்பு வீரர் கோபின் ஓங் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை அளித்தார். 30-ஆவது நிமிடத்தில் ஜெய்ரோ டா சில்வா இரண்டாவது கோலைச் சேர்த்தார். இடைவேளைக்குப் பிறகு, 54-ஆவது நிமிடத்தில் ஜெய்ரோ மீண்டும் கோல் அடித்து ஜொகூரின் முன்னிலையை வலுப்படுத்தினார்.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் மலாக்கா அணி அஹமத் ஷம்சால்டின் மூலம் ஒரு ஆறுதல் கோலை பெற்றது.

அரை இறுதியில் ஜொகூர் அணி, கோலாலம்பூர் சிட்டி எஃப்.சி அணியை எதிர்கொள்கிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset