நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய பூப்பந்து அணிக்கு லீ ஸீ ஜியாவின் அனுவம் மிக அவசியமாக தேவைப்படுகிறது

கோலாலம்பூர்: 

ஏப்ரலில் நடைபெறும் தாமஸ் கோப்பை பூப்பந்து போட்டியில், மலேசிய அணிக்கு லீ ஸீ ஜியா மிகவும் முக்கியமானவர் என்பது தற்போது தெளிவாகிறது. அவர் இன்னும் முழு உயர்வு நிலைக்கு வராதிருந்தாலும், அணிக்கு அவரது அனுபவம் மிகவும் தேவைப்படுகிறது.

மலேசியாவின் முன்னணி ஆண் ஒற்றையர் வீரர் லியோங் ஜூன் ஹாவோ, ஜெர்மன் ஓபன் போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார். தைவான் வீரர் சி யு ஜென் அவரை கடுமையான போட்டியில் வென்றார்.

மேலும், மலேசியாவின் மற்றொரு வீரர் ஜஸ்டின் ஹோ போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார். இதனால், தாமஸ் கோப்பைக்கு முன் மலேசியாவின் ஆண் ஒற்றையர் பிரிவு பலவீனமாக உள்ளது என்ற கவலை எழுந்துள்ளது.

ஆனால், பெண்கள் பிரிவில் வோங் லிங் சிங் இந்திய வீராங்கனையை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்ததாக அவர் தாய்லாந்தின் முன்னணி வீராங்கனை போர்ன்பாவீ சோச்சுவோங் அவரை எதிர்கொள்கிறார்.

எனவே, ஆண் ஒற்றையர் பிரிவில் மலேசியா தற்போது சிக்கலை எதிர்நோக்குகிறது. இதனால் லீ ஸீ ஜியா அணிக்கு மிகவும் அவசியமானவர் என கூறப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset