செய்திகள் தமிழ் தொடர்புகள்
முன் அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்: தவெகவினருக்கு கட்டுப்பாடு
சென்னை:
“கட்சித் தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, தவெக மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது,” என அக்கட்சியின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிரமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நிர்வாகிகளால் ஏற்படும் பல்வேறு சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக, தவெக தலைமை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது. பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள், யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும்.
முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 6:44 pm
தமிழக-கர்நாடக எல்லையில் பதற்றம்: ஓசூர் எல்லையில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்
July 25, 2026, 2:57 pm
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
July 25, 2026, 2:53 pm
“என்னிடமிருந்து மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா?” - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்
July 23, 2026, 7:33 am
இந்திய அஞ்சல் துறை பெயரில் நூதன சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை
July 21, 2026, 4:59 pm
உயிரி-எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்
July 20, 2026, 3:08 pm
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது
July 19, 2026, 6:30 pm
10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
July 16, 2026, 3:09 pm
