செய்திகள் தமிழ் தொடர்புகள்
தவறு செய்தால் அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும்: முதல்வர் விஜய் எச்சரிக்கை
சென்னை:
அமைச்சர்கள் யாரேனும் தவறு செய்தால், தவறு நடந்தது தெரிய வந்தால், அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த சில வாரங்களாக அமைச்சர்கள் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு செய்வதாகக் கூறி விடியோ எடுத்து வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அது மக்களிடைய பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும் அதிருப்தி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் இன்று அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நேரடியாகவே முதல்வர் விஜய் இது குறித்து தன்னுடைய கருத்தினை தெரிவித்திருப்பதாகவும், அமைச்சர்களுக்கு பதவி பறிக்கப்படும் என்று அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 10:06 pm
இனிமேல் பெண்களப் பற்றி அசிங்கமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: பேரவையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
September 5, 2026, 10:07 pm
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை நிலையம்
September 3, 2026, 3:14 pm
சென்னை விமான நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் மதிப்புடைய 3.45 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: மலேசிய ஆடவர் கைது
September 3, 2026, 2:07 pm
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
September 2, 2026, 2:55 pm
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாள்களாக உயா்த்தியது தமிழக அரசு
August 30, 2026, 9:40 pm
