நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்லாம் குறித்து அவமதிப்பான பதிவு: தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழக மாணவர்

குவாந்தான்: 

 இஸ்லாம், நபி முஹம்மது அவர்களை அவமதிக்கும் வகையிலான பதிவைத் தனது சமூக ஊடகத்தில் பதிவேற்றியதற்காகப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொதுமக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அந்த மாணவர், தனது செயல் இஸ்லாம் மதத்தின் புனிதத்தன்மையை மதிக்காத மிகப் பெரிய தவறு என்று ஒப்புக்கொண்டார்.

“அல்-குர்ஆனைப் பற்றிய படத்தை நான் முன்பு பதிவேற்றியதற்காக முழு மனதுடன் மன்னிப்பு கேட்கிறேன்.

என் செயல் தவறானது, ஒழுக்கமற்றது, மிகவும் மரியாதையற்றது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோபம், மனக்கசப்பு காரணமாகவே இப்படிச் செயல்பட்டதாகவும் அவர் அப்பதிவின் மூலம் ஒப்புக்கொண்டார்.

“அல்-குர்ஆன் என்பது முஸ்லிம்கள் மிகுந்த மரியாதையுடன் போற்றும் புனித நூல் என்பதை நான் உணர்கிறேன். அது ஒரு சாதாரண புத்தகம் அல்ல; அது இறைவனின் வாக்கும், வாழ்க்கை வழிகாட்டியும் ஆகும். என் செயல் முதிர்ச்சியும் மரியாதையற்றதாக இருந்துள்ளது.

இந்தத் தவறுக்கு முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். யாரையும் குற்றம் சாட்டவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் நான் என்னைக் கட்டுப்படுத்தி புத்திசாலித்தனமாக நடந்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.

மேலும், அவர் தனது தவறுக்கு மன்னிப்பு கோரி, அந்தப் பதிவை நீக்கிவிட்டதாகவும், இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset