நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சகங்களின் செயல்திறன் கண்காணிப்பு தீவிரம்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்: 

தற்போதைய அமைச்சரவை நேர்மையுடன் செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட முக்கிய செயல்திறன் குறியீடுகளின் அடிப்படையில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுகின்றன என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நேர்மை மீறல் ஏற்பட்டால் எந்த சமரசமும் இல்லை என அரசின் நிலைப்பாடு உறுதியானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொறுப்புணர்ச்சி என்பது தண்டனை மட்டுமல்ல; திருத்தம், தொடர்ச்சியான மேம்பாடு, மக்களுக்கான நெறிப்பொறுப்பும் அதில் அடங்கும் என அவர் கூறினார். 

"எனவே, ஒவ்வொரு அமைச்சகமும் உண்மையிலேயே திறம்பட, நம்பகத்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்வதற்காக உயர் செயல்திறன், நேர்மையின் கலாச்சாரம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்," என்று அவர் நாடாளுமன்ற வலைத்தளத்தில் கூறினார்.

தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும், தேசிய தணிக்கைத் துறை, ஊழல் எதிர்ப்பு குறித்த அமைச்சரவை சிறப்பு குழுவும் மேலும் பலப்படுத்தப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் அரசியலமைப்பின் அடிப்படையில், பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற உறுதியை மடானி அரசு வலியுறுத்துகிறது எனவும் அவர் கூறினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset