செய்திகள் மலேசியா
சோதனையைத் தவிர்க்க முயன்ற இரு மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது: போதைப்பொருள் பறிமுதல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் துவாஸ் சோதனை மையத்தில் (Tuas Checkpoint) சோதனையைத் தவிர்க்க முயன்றதற்காக, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரில் பயணம் செய்த இரண்டு மலேசியர்களைச் சிங்கப்பூர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்று சிங்கப்பூர் குடியேற்ற, சோதனை நிலைய ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
உடனடியாக அதிகாரிகள் வாகனத்தை சுற்றிவளைத்து, 40 வயது ஓட்டுநரும், 53 வயது பயணியும் கைது செய்யப்பட்டனர். இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
“சுமார் 97 கிராம் ஹெராயின், 69 கிராம் ‘ஐஸ்’, மூன்று எரிமின்-5 மாத்திரைகள், போதைப்பொருள் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 27 மாத்திரைகளும் பல்வேறு போதைப்பொருள் உபகரணங்களும், ஓட்டுநரிடமும் முன்புற பயணியின் இருக்கையின் கீழ் இருந்த சிறிய பையிலும் கண்டெடுக்கப்பட்டன.
மேலும், சம்பவ நேரத்தில் ஓட்டுநரிடம் முறையான பயண ஆவணங்களும் இல்லை,” என ICA வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பின்னர், இருவரும் போதைப்பொருள் குற்ற விசாரணைக்காக மத்திய போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் (CNB) ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், அந்த ஓட்டுநர் மீது குடியேற்றச் சட்ட மீறல்கள், கவனக்குறைவான ஓட்டுதல், பிற போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 5:37 pm
இஸ்லாம் குறித்து அவமதிப்பான பதிவு: தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழக மாணவர்
February 25, 2026, 5:34 pm
குடியிருப்பு வழித்தடத்தில் 13 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
February 25, 2026, 5:32 pm
டாருல் அமான் பஜாரில் தீ விபத்து: 5 கூடாரங்கள் சாம்பல்
February 25, 2026, 4:47 pm
மாலை 6 மணி வரை இடியுடன் கனமழை பெய்யும்: மலேசிய வானிலைத் துறை எச்சரித்துள்ளது
February 25, 2026, 4:02 pm
39 வயதுடைய பெண்மணியின் சடலம் கெடா நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
February 25, 2026, 3:51 pm
பேரரசர் பெயரில் போலி பிரசாரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு
February 25, 2026, 3:48 pm
‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டை மறுத்தது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் - SPRM
February 25, 2026, 3:47 pm
