செய்திகள் மலேசியா
பேரரசர் பெயரில் போலி பிரசாரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு
கோலாலம்பூர்:
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கண்டார் அவர்களின் குரலை நகலெடுத்து ரமலான் மாத நிதி உதவிப் பிரசாரம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் சில போலி சமூக ஊடக அகப்பக்கங்களை அரச பத்திரிகை அலுவலகம் (RPO) கண்டறிந்துள்ளது.
ஆகையால், பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பரவும் போலி தகவல்களை நம்புவதில் கவனமாக இருக்க வேண்டும் என RPO அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மாமன்னர், பிற தலைவர்களின் அடையாளத்தைப் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்றும் RPO எச்சரித்துள்ளது.
மாட்சிமை தங்கியவரின் அலுவலகம், ஜோகூர் அரச அரண்மனையிலிருந்து வரும் அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் சரிபார்க்கப்பட்ட ,அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலம் மட்டுமே அனுப்பப்படுகின்றன என்பது பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
மாநில நிதி உதவி திட்டமான Bantuan Kasih Johor உதவி திட்டத்தை ஊக்குவிக்கும் ஜொகூர் மாநில நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களாகக் காட்டிக் கொள்ளும் குறைந்தது12 போலி சமூக ஊடக அகப்பக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துர் ரஹ்மான் அர்சத் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 5:37 pm
இஸ்லாம் குறித்து அவமதிப்பான பதிவு: தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழக மாணவர்
February 25, 2026, 5:36 pm
சோதனையைத் தவிர்க்க முயன்ற இரு மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது: போதைப்பொருள் பறிமுதல்
February 25, 2026, 5:34 pm
குடியிருப்பு வழித்தடத்தில் 13 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
February 25, 2026, 5:32 pm
டாருல் அமான் பஜாரில் தீ விபத்து: 5 கூடாரங்கள் சாம்பல்
February 25, 2026, 4:47 pm
மாலை 6 மணி வரை இடியுடன் கனமழை பெய்யும்: மலேசிய வானிலைத் துறை எச்சரித்துள்ளது
February 25, 2026, 4:02 pm
39 வயதுடைய பெண்மணியின் சடலம் கெடா நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
February 25, 2026, 3:48 pm
‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டை மறுத்தது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் - SPRM
February 25, 2026, 3:47 pm
