நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடியிருப்பு வழித்தடத்தில் 13 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

ஜார்ஜ்டவுன்: 

 கிரிஸ்டல் ஹைட்ஸ் குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்தும் வழித்தடத்தில், கடுமையாக காயமடைந்த 13 வயது சிறுமி இன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

காலை 9 மணியளவில் தூய்மை பணியாளர் ஒருவர் அந்தச் சிறுமியைக் கண்டதாக பெயர் தெரிவிக்க விரும்பாத குடியிருப்பாளர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.

“அவள் எவ்வளவு நேரமாக அங்கே கிடந்திருந்தாள் என்று தெரியவில்லை. அவளருகில் கருப்பு நிற பை இருந்தது. பள்ளி பெயர் பொறிக்கப்பட்ட விளையாட்டு உடை அணிந்திருந்தாள்.

நான் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தேன். ஆம்புலன்ஸ் வந்தபோது, மருத்துவ குழு அவள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தது.

அவள் கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் எந்த மாடியில் இருந்து விழுந்தாள் என்பது தெரியவில்லை. அவள் இங்கு வசிப்பவர் அல்ல. சுங்கை டுவா பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது,” என்றார் அவர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும் சம்பவ இடத்திற்கு வந்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அவள் எப்படி அந்த இடத்திற்குச்  சென்றாள் என்பது குறித்து அவர்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் அப்துல் ரோசாக் முஹம்மத் தெரிவித்தார்.

“முழுமையான அறிக்கை கிடைக்கும் வரை காத்திருக்கிறோம்,” என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset