செய்திகள் மலேசியா
‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டை மறுத்தது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் - SPRM
புத்ராஜெயா:
தங்களுடன் தொடர்புபடுத்தி ‘கார்ப்பரேட் மாஃபியா’ இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) மறுத்துள்ளது. இவை, கார்ப்பரேட் துறையில் உள்ள சிலர்மீது மேற்கொள்ளப்படும் விசாரணை, அமலாக்க நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையைக் கெடுக்கும் சதிமுயற்சி எனவும் அது தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமில்லாத பெயரில்லா வலைப்பதிவிலிருந்து வந்தவை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
“அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை SPRM முழுமையாக நிராகரிக்கிறது. இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகள், சட்டப்படி மேற்கொள்ளப்படும் அமலாக்க நடவடிக்கைகளின் மீது பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் என்பதால், ஆணையம் இதை மிகக் கடுமையாகக் கருதுகிறது,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது பழைய குற்றச்சாட்டுகளை மீண்டும் பரப்பி, ஆணையத்தின் பெயரையும் புகழையும் கெடுக்க நினைத்தே மேற்கொள்ளப்படும் செயல் என்றும் தெரிவித்துள்ளது.
அனைத்து விசாரணைகளும் சட்டத்திற்கு உட்பட்டு, ஆதாரங்களின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்ட சட்ட நடைமுறைகளின்படியும் மேற்கொள்ளப்படுவதாக SPRM வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது மலேசிய காவல்துறையால் (PDRM) விசாரிக்கப்பட்டு வருவதாகவும், SPRM அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஊழல் அல்லது தவறான நடத்தைகள் குறித்த நம்பகமான தகவல்கள் அல்லது ஆதாரங்கள் உள்ளவர்கள், அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என SPRM கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், எந்த அச்சமுமின்றி, பாகுபாடு இல்லாமல் ஊழலை ஒழிக்கும் தனது கடமையைத் தொடர்ந்து நிறைவேற்ற SPRM உறுதியாக இருப்பதாகவும், தங்களின் நேர்மை, பங்கு, செயல்பாடுகளைப் பாதிக்கும் எந்த முயற்சிகளாலும் தடுக்கப்படமாட்டோம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 5:37 pm
இஸ்லாம் குறித்து அவமதிப்பான பதிவு: தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழக மாணவர்
February 25, 2026, 5:36 pm
சோதனையைத் தவிர்க்க முயன்ற இரு மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது: போதைப்பொருள் பறிமுதல்
February 25, 2026, 5:34 pm
குடியிருப்பு வழித்தடத்தில் 13 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
February 25, 2026, 5:32 pm
டாருல் அமான் பஜாரில் தீ விபத்து: 5 கூடாரங்கள் சாம்பல்
February 25, 2026, 4:47 pm
மாலை 6 மணி வரை இடியுடன் கனமழை பெய்யும்: மலேசிய வானிலைத் துறை எச்சரித்துள்ளது
February 25, 2026, 4:02 pm
39 வயதுடைய பெண்மணியின் சடலம் கெடா நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
February 25, 2026, 3:51 pm
பேரரசர் பெயரில் போலி பிரசாரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு
February 25, 2026, 3:47 pm
