நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிக் டோக் நேரலையில் நோன்பை அவமதித்த பெண்: இஸ்லாமிய சமய விவகாரத்துறை விசாரணை

சிரம்பான்: 

கடந்த ஞாற்றுக்கிழமை டிக் டோக் வலைத்தள நேரலையில் நோன்பின் போது உணவு உட்கொண்ட பெண்ணை நெகிரி செம்பிலான் மாநில இஸ்லாமிய சமய ஆவணங்கள் துறை (JHEAINS) விசாரணை செய்து வருகிறது.

இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் 27 வயதான அப்பெண் கோலா பிலாவில் நேற்று கைது செய்யப்பட்டு, தற்போது 1992 ஆம் ஆண்டின் நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டத்தின்படி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று JHEAINS தலைமை இயக்குநர் டத்தோ முஹம்மத் அஸ்ரி அப்துல்லா கூறினார்.

“சம்பந்தப்பட்ட காணொலியில் அந்தப் பெண் மாலை 6.45 மணியளவில் டிக்டாக் நேரலையில் வெளிப்படையாக உணவு, பானம் எடுத்துக் கொண்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மக்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள், மதத்தின் உணர்வுகளை மதித்து புனிதமான ரமலான் மாதத்தில் நல்ல நடத்தையைக் காட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முஹம்மத் அஸ்ரி அறிவுறுத்தினார்.

மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளும் இஸ்லாமிய சட்டங்களுக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் JHEAINS கவனம் செலுத்தும் என வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, சமூக ஊடகங்களில், ஒரு பெண் தனது டிக்டாக் நேரலையில் வெளிப்படையாக தண்ணீர் குடித்ததாக காணொலி பரவியது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset