செய்திகள் மலேசியா
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வழக்கு; போலீஸ் விசாரணைக்கு முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது: மாநில முதல்வர் சௌ கோன் இயோவ்
ஜார்ஜ்டவுன்:
மனைவியை அடித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆட்சிக்குழு உறுப்பினரின் (EXCO) வழக்கைப் பினாங்கு அரசு விசாரணைக்காகப் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளது.
மாநில முதல்வர் சௌ கோன் இயோவ், ஆட்சிக்குழு உறுப்பினருடன் தொடர்பு கொண்டதாகவும், அவர் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்றும் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக மன்னிப்பு கோரியதாகவும், இது கணவன் மனைவி இடையேயான குடும்ப பிரச்சனை மட்டுமே என விளக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
“இருவரும் போலீஸில் புகார் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். தற்போதைய தகவலின்படி இருவரும் தங்களது புகார்களை வாபஸ் எடுத்துள்ளனர்.
வழக்கில் எந்தவொரு முன்னேற்றம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) நெறிமுறைகளைப் பின்பற்றி மாநில அரசு அல்லது கட்சியிடம் தகவல் வழங்குவார் என நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் பரவியதும், அவர் பணியிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, அரசு இதுவரை இதை உத்தியோகபூர்வ விசாரணைக்கு ஒப்படுத்தி வைத்துள்ளதாகவும், முதலில் போலீஸ் விசாரணையை எதிர்நோக்கவேண்டும் என்றும் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பினாங்கு மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் மனைவியைத் அடித்ததாகச் சந்தேகித்து போலீசார் கைது செய்ததாகச் சமூக ஊடகங்களில் பரவியது. சம்பந்தப்பட்ட நபர் திங்கட்கிழமை மாலை சுமார் 6 மணிக்கு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 5:37 pm
இஸ்லாம் குறித்து அவமதிப்பான பதிவு: தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழக மாணவர்
February 25, 2026, 5:36 pm
சோதனையைத் தவிர்க்க முயன்ற இரு மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது: போதைப்பொருள் பறிமுதல்
February 25, 2026, 5:34 pm
குடியிருப்பு வழித்தடத்தில் 13 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
February 25, 2026, 5:32 pm
டாருல் அமான் பஜாரில் தீ விபத்து: 5 கூடாரங்கள் சாம்பல்
February 25, 2026, 4:47 pm
மாலை 6 மணி வரை இடியுடன் கனமழை பெய்யும்: மலேசிய வானிலைத் துறை எச்சரித்துள்ளது
February 25, 2026, 4:02 pm
39 வயதுடைய பெண்மணியின் சடலம் கெடா நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
February 25, 2026, 3:51 pm
பேரரசர் பெயரில் போலி பிரசாரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு
February 25, 2026, 3:48 pm
‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டை மறுத்தது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் - SPRM
February 25, 2026, 3:47 pm
