செய்திகள் மலேசியா
மாலை 6 மணி வரை இடியுடன் கனமழை பெய்யும்: மலேசிய வானிலைத் துறை எச்சரித்துள்ளது
கோலாலம்பூர்:
இன்று மாலை 6 மணி வரை, கோலாலம்பூர், புத்ராஜெயா, மற்ற ஒன்பது மாநிலங்களில் இடியுடன் கனமழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என மலேசிய வானிலைத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
மாலை 2.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கெடா மாநிலத்தில் பண்டார் பாரு பகுதியிலும், பேராக் மாநிலத்தின் கெரியான், லாரூட், மாதாங், செலாமா, கோலா காங்சார், முவாலிம் பகுதிகளிலும் இந்த வானிலை நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
பகாங் மாநிலத்தில் கேமரன் மலை, ரவுப், பெந்தோங், தெமர்லோ பகுதிகள் பாதிக்கப்படலாம். சிலாங்கூர் மாநிலத்தில் கோலா சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், ஹுலு லங்காட், பகுதிகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெலபு, சிரம்பான், போர்ட் டிக்சன், கோலா பிலா, ரெம்பாவ், மலாக்கா மாநிலத்திற்கும் இதே எச்சரிக்கை பொருந்தும்.
ஜொகூர் மாநிலத்தில் தங்காக், செகாமாட், மூவார், பத்து பஹாட், பொன்தியான், கூலாய், பகுதிகள் எச்சரிக்கைக்குள் உள்ளன.
சரவாக் மாநிலத்தில் லிம்பாங் பகுதியிலும், சபா மாநிலத்தில் உள்நாட்டு பகுதிகளான டெனோம், நபாவான், குடாட் பகுதிகளிலும் இடியுடன் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் வெளிப்பயணங்களை தவிர்க்கவும், வானிலை மாற்றங்களை கவனத்துடன் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 5:37 pm
இஸ்லாம் குறித்து அவமதிப்பான பதிவு: தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழக மாணவர்
February 25, 2026, 5:36 pm
சோதனையைத் தவிர்க்க முயன்ற இரு மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது: போதைப்பொருள் பறிமுதல்
February 25, 2026, 5:34 pm
குடியிருப்பு வழித்தடத்தில் 13 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
February 25, 2026, 5:32 pm
டாருல் அமான் பஜாரில் தீ விபத்து: 5 கூடாரங்கள் சாம்பல்
February 25, 2026, 4:02 pm
39 வயதுடைய பெண்மணியின் சடலம் கெடா நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
February 25, 2026, 3:51 pm
பேரரசர் பெயரில் போலி பிரசாரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு
February 25, 2026, 3:48 pm
‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டை மறுத்தது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் - SPRM
February 25, 2026, 3:47 pm
