செய்திகள் மலேசியா
இராணுவப்படை குறித்து அவதூறாக பேச வேண்டாம், என் மகனின் மரணம் பகடிவதைச் சம்பவம் அல்ல’ – ட்ரூப்பர் இந்திரனின் தாய்
ஜார்ஜ்டவுன்:
“இது பகடிவதைச் சம்பவம் அல்ல. மலேசிய ராணுவப்படை (ATM) மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டாம்,” என்று, தனது மகன் ட்ரூப்பர் கே. இந்திரனின் (22) மரணம் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளுக்குப் பதிலளித்து அவரது தாய் கூறியுள்ளார்.
உடற்கூறு பரிசோதனையின் அறிக்கையில் அவரது மறைந்த மகனின் உடலில் எந்தவித உடல் காயங்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக எஸ். உஷா (52) தெரிவித்தார். இதனால், அவர் தாக்கப்பட்டார் அல்லது துன்புறுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆரம்பத்தில், மகன் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்ட தகவலை முன்கூட்டியே தெரிவிக்காததால் தமக்கு கோபம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
தனது மகன் திடீரென இறந்தது தமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியதாக உஷா தெரிவித்தார். அவர் ஒரு சுறுசுறுப்பான ராணுவ வீரராக இருந்ததோடு, எந்த உடல்நலக் குறையும் காணப்படவில்லை என்றும் கூறினார்.
இந்திரன் பொறுப்புணர்வும், மகிழ்ச்சியான இயல்பும் கொண்டவர் என்றும், குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்தார் என்றும் அவர் நினைவுகூர்ந்தார். சம்பவத்திற்கு முன்பு வரை, தினமும் காலை தன்னைத் தொடர்பு கொண்டு தனது நிலையைத் தெரிவித்துவிட்டு தான் தினசரி பணியைத் தொடங்குவார் என்றும் கூறினார்.
மேலும், தனது மறைந்த கணவர் மேஜர் சி. காயம்பூவின் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்திரன் ராணுவத்தில் சேர்ந்ததாகவும் தெரிவித்தார். மலேசிய விமானப்படையின் (TUDM) விமானியான மேஜர் சி. காயம்பூ 2016-ஆம் ஆண்டு பீச் கிராஃப்ட் B200T விமான விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் தந்தையைப் போல் தானும் விமானப்படையின் விமானியாக வேண்டும் என்ற தன் மகனின் கனவு நிறைவேறாமல் போனதை எண்ணி உஷா வருந்துவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, இந்திரனின் உடல் இன்று அதிகாலை 1.45 மணிக்கு வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. நண்பகல் 12 மணியளவில் முழு ராணுவ மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, பிறகு மதியம் 3 மணியளவில், பத்து லாஞ்சாங் இந்து மயானத்தில், அவரது தந்தையின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட உள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 21, 2026, 7:34 pm
ஓய்வுபெற்ற பெண்ணிடம் RM10,000 மோசடி: மயக்கி ஏமாற்றிய கும்பல்
February 21, 2026, 7:32 pm
கோத்தா பெலுட் பகுதியில் 14 வீடுகள் தீக்கிரையாகின
February 21, 2026, 7:28 pm
தாயைக் கத்தியால் குத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பெண் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
February 21, 2026, 3:09 pm
அன்வார் – லாரன்ஸ் சந்திப்பு: மலேசியா–சிங்கப்பூர் உறவுகள் மேலும் வலுப்பெறுகின்றன
February 21, 2026, 3:05 pm
லங்காவியில் குழந்தையுடன் கடலில் குளித்த போது காணாமல் போன சீன நபர்
February 21, 2026, 3:03 pm
சீனப் பெருநாள் கொண்டாட்ட காலகட்டத்தின்போது திரங்கானுவில் ஒரே வாரத்தில் 10 உயிர் இழப்பு
February 20, 2026, 5:33 pm
பினாங்கு ரமலான் சந்தைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சமையல் செய்யத் தடை
February 20, 2026, 4:54 pm
14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இரு நண்பர்கள் மீது குற்றச்சாட்டு
February 20, 2026, 4:46 pm
