நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்காவியில் குழந்தையுடன் கடலில் குளித்த போது காணாமல் போன சீன நபர்

அலோர் ஸ்டார்: 

லங்காவி தஞ்சூங் ரூ கடற்கரையில் நேற்று குளித்துக் கொண்டிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து நேற்று இரவு 8.43 மணிக்கு மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறைக்கு (JBPM) தகவல் அளிக்கப்பட்டது.

ஆரம்பக்கட்ட தகவலின்படி 49 வயதான அந்த நபர் தனது மகனுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தாக லங்காவி மண்டலம் 4-ன் தீயணைப்பு அதிகாரி முஹம்மத் சம்ரி அப்துல் கானி கூறினார்.

“சிறிது நேரத்தில் தந்தை தன் கண் பார்வையில் இருந்து மறைந்ததை அவரது மகன் கவனித்தார். பின்னர் கடல் மேற்பரப்பில் மிதந்த நிலையில் தந்தையின் தொப்பி மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் ஹோட்டல் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார்.

ஹோட்டல் நிர்வாகம் கடல் அமலாக்க துறையைக் (APMM) தொடர்பு கொண்டது. அவர்கள் தீயணைப்பு துறையை தொடர்பு கொண்டு தேடுதல், மீட்பு பணிக்கு உதவ கேட்டனர்,” என அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பவ இடத்திற்கு 15 நிமிடங்களில் வந்த லங்காவி தீயணைப்பு குழு, பாதிக்கப்பட்டவர் காணாமல் போனதாக நம்பப்படும் பகுதியில் தேடுதல் பணியைத் தொடங்கியது.

“அலைகள், நீர்ச் சுழற்சி, மீட்புப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்,” என அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset