நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் – லாரன்ஸ் சந்திப்பு: மலேசியா–சிங்கப்பூர் உறவுகள் மேலும் வலுப்பெறுகின்றன

கோலாலம்பூர்:

 இன்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடன் நடத்திய சந்திப்பில் மலேசியா, சிங்கப்பூர் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையே நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டதாக அன்வார் தனது முகநூல் அகப்பக்கத்தில் கூறினார்.

“பிரதமர் லாரன்ஸ் அவர்களின் வருகை, இரு நாடுகளின் நட்புறவைக் காட்டும் ஒரு சின்னமாகும். அதே நேரத்தில், எங்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவையும் இது மேலும் வலுப்படுத்துகிறது.

இந்தச் சந்திப்பு, நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட 'Seri Negara' என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இல்லத்தில் நடைபெற்றது.

லாரன்ஸ் வோங் இன்று மாலை 4.05 மணிக்கு மலேசியாவை வந்தடைந்தார். சிறப்பு பயணத்தை முடித்த பிறகு, அவர் இரவு மீண்டும் புறப்பட்டுச் சென்றார்.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இரு பிரதமர்களும் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பொதுநலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கவிருந்தனர்.

சிங்கப்பூர், மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக் கூட்டாளியாக உள்ளது. 2025-ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் RM402.35 பில்லியன் (USD93.97 பில்லியன்) ஆக பதிவாகி, 2024-ஐ விட 1.5 சதவீதம் உயர்வைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset