செய்திகள் இந்தியா
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
நியூ டெல்லி:
சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ நாயைத் தங்களின் சொந்த கண்டுபிடிப்பாகக் காட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தால் இந்தியாவில் பல்கலைக்கழகம் ஒன்று கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நாட்டின் முக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
‘ஓரியன்’ என அழைக்கப்பட்ட அந்த ரோபோ 'Galgotias' பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தில் உருவாக்கப்பட்டதாக அப்பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு பேராசிரியர் நேஹா சிங், அரசு செய்தி ஒளிப்பரப்பு ஊடகமான DD News-க்கு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பயனர்கள் அந்த ரோபோ உண்மையில் சீன நிறுவனமான Unitree Robotics தயாரித்த ஒன்றாகும் என்றும் அது உலகளவில் ஆராய்ச்சி, கல்வித் துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்றும் விரைவில் கண்டறிந்துள்ளனர்.
இந்த வெளிப்பாடு இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி குறித்த இலக்குகள் மீது கேள்விகளை எழுப்பியதோடு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்த நிலையில் அது சமூக ஊடக பயனர்களிடையே பெரும் எதிர்ப்பை பெற்றுள்ளது.
பின்னர், Galgotias பல்கலைக்கழகமும் நேஹா சிங்கும் அந்த ரோபோ தங்களால் உருவாக்கப்பட்டதல்ல என்றும் தாங்கள் அவ்வாறு கூறியதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
“இந்த ரோபோவை நாங்கள் உருவாக்கவில்லை. ஆனால், இப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்குகிறோம்,” என்று அந்தப் பல்கலைக்கழகம் X தளத்தில் தெரிவித்தது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
