செய்திகள் இந்தியா
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
ஹசாரிபாக்:
இந்தியாவில் உள்ள ஹசாரிபாக் மாவட்டத்தில், நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த 18 யானைகள் வீடுகளை மிதித்து தாக்கியதில் மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
தூங்கிக் கொண்டிருந்த மக்களை இலக்காகக் கொண்டு நடந்த இந்த திடீர் தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார்.
யானைகள் மக்களின் வீடுகளையும் பொருட்களையும் முற்றாக சேதப்படுத்தியதால், கிராமம் முழுவதும் பெரும் அழிவு ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு கிராம மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பொகாரோ, ராம்கர், ஹசாரிபாக் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு விதிகளின்படி இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
