செய்திகள் சிந்தனைகள்
உணவை வீணாக்கினால் ஃபிரான்சில் அபராதம்: நோன்பில் நாம் என்ன செய்யப் போகிறோம்?
உணவை வீணாக்குவதற்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை பிரான்ஸ் அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பிரான்ஸ் இந்த விஷயத்தில் உலகிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது. அந்த வகையில் உணவு வீணாக்கப்படுவதை சட்டப்பூர்வமாக தடைசெய்த முதல் நாடு பிரான்ஸ்.
சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படாத அல்லது காலாவதி தேதி நெருங்கும் உணவுகளைக் குப்பையில் கொட்டவோ, அழிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய உணவுகளைத் தொண்டு நிறுவனங்களுக்கும், உணவு வங்கிகளுக்கும் (Food Banks) தானமாக வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உணவை வீணாக்கினால் சுமார் €3,750 (சுமார் ₹ 3.3 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும்.
இப்போது வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, வீடுகளிலும் உணவுக் கழிவுகளை மற்ற குப்பைகளோடு கலக்கக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.
உணவகங்களில் வாடிக்கையாளர்கள் மீதப்படுத்தும் உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல 'Doggy bags' (மீதமுள்ள உணவை பேக் செய்து தருதல்) வழங்குவதை பிரான்ஸ் கட்டாயமாக்கியுள்ளது.
பிரான்ஸைப் பின்பற்றி மற்ற ஐரோப்பிய நாடுகளும் இத்தகைய சட்டங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றன.
இஸ்லாமிய அரசாங்கம் செய்யவேண்டிய பணியை அவர்கள் செய்கிறார்கள்.
இந்த விஷயத்தில் இஸ்லாமிய சமூகத்திடம்தான் எவ்வளவு அலட்சியம்!
"உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள்!” (8:31) என்பது அல்லாஹ்வின் கட்டளை அல்லவா?
இதோ ஓரிரு நாட்களில் ரமலான் நோன்பு துவங்க இருக்கிறது. நோன்பு திறக்க பெரிய உணவகங்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது. பெரும்பாலும் இங்கு அளவுக்கு அதிகமான உணவுகள் வாங்கி சாப்பிட முடியாமல் அத்தனையும் குப்பையில் வீசப்படுகிறது. தேவைக்கு அதிகமாக வாங்கி இறை சாபத்திற்கு ஆளாக வேண்டாம்.
நாம் வீணடிக்கும் ஒவ்வொரு பருக்கை உணவுக்கும் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்!
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
