செய்திகள் மலேசியா
மிசி திட்டம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் வெற்றி மடானி திட்டமாக தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
இந்திய சமுதாயத்திற்கான மிசி திட்டம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் வெற்றி மடானி திட்டமாக தொடரும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை அறிவித்தார்.
இந்திய சமுதாயத்தின் திறன் ஆற்றலை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் இந்த மிசி திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மிசி 2.0 திட்டத்தில் கிட்டத்தட்ட 400 பேர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தற்போது நல்லவொரு வேலையில் உள்ளனர்.
குறிப்பாக 3,500 முதல் 7,500 வரை வருமானம் பெறுகின்றனர். இது தான் இத்திட்டத்தின் வெற்றியாகும்.
மேலும் 400 பேரின் இந்த வெற்றி அவர்களின் குடும்பத்தை உருமாற்றி உள்ளது.
அதன் அடிப்படையில் இத்திட்டத்தை அமைச்சு தொடரவுள்ளது.
ஆனால் வெற்றி மடானி எனும் பெயர் மாற்றத்துடன் இத்திட்டம் தொடரவுள்ளது.
தேலண்ட் கோர்ப், எச்ஆர்டி கோர்ப் கூட்டமைப்பில் இத்திட்டம் தொடரவுள்ளது.
குறிப்பாக கூடுதல் நிதியுடன் இத்திட்டம் தொடரவுள்ளது.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என எண்ணம் கொண்டவர்கள் இத்திட்டத்தில் இணையலாம் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 2:07 pm
பியூஃபோர்டில் வெள்ளம் பாதிப்பு: 9 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன
February 12, 2026, 1:52 pm
செக்கு சந்திரா கைது: போலிஸ்
February 12, 2026, 12:46 pm
பள்ளிகளில் அதிகரிக்கும் பகடிவதை சம்பவங்கள்: 2,889 வழக்குகள் பதிவாகியுள்ளன
February 12, 2026, 12:22 pm
சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கிய இரு நிறுவன நிர்வாகிகளுக்கு தலா RM10,000 அபராதம்
February 12, 2026, 12:06 pm
ஃப்ரீமேசன் ஆதரவாளராக மூத்த பேராசிரியர் மீது குற்றச்சாட்டு:விசாரணையைத் தொடங்கியுள்ளது மலாயா பல்கலைக்கழகம்
February 12, 2026, 11:20 am
முன்னாள் மலாக்கா முதல்வரின் அரசியல் செயலாளர், அரசு துறை தலைவர்களைக் காவலில் வைக்க SPRM கோரியுள்ளது.
February 12, 2026, 10:40 am
கோத்தா கினபாலுவில் அதிர்ச்சி சம்பவம்: குப்பை கொட்டும் இடத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது
February 12, 2026, 10:32 am
