நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செக்கு சந்திரா கைது: போலிஸ்

கோலாலம்பூர்:

முகநூலில் தேச நிந்தனை கருத்துக்களை பதிவேற்றியதாக செக்கு சந்திரா போலிசார் கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் இதனை தெரிவித்தார்.

பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் எரிச்சலூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் போலிசாருக்கு ஒரு நபரிடமிருந்து புகார் கிடைத்தது.

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள ஒரு பேரங்காடியில் இருந்தபோது பதிவேற்றிய பேஸ்புக் பதிவைப் பார்த்ததாக புகார்தாரர் தெரிவித்தார்.

இந்த அறிக்கையில் அவமதிக்கும் கூறுகள் இருப்பதாகவும், அனுமதியில்லாத கோயில்கள் தொடர்பான பிரச்சினையைத் தொடுவதாகவும் கூறப்படுகிறது.

இது தேச நிந்தனைக்கு எதிரானது. பொது ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் புண்படுத்தும் வகையில் உள்ளது.

இதனால் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நடவடிக்கையைத் தூண்டும் திறன் கொண்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset