செய்திகள் மலேசியா
ஃப்ரீமேசன் ஆதரவாளராக மூத்த பேராசிரியர் மீது குற்றச்சாட்டு:விசாரணையைத் தொடங்கியுள்ளது மலாயா பல்கலைக்கழகம்
கோலாலம்பூர்:
மலாயா பல்கலைக்கழகத்தின் (UM) மூத்த பேராசிரியர் ஒருவர் ஃப்ரீமேசன் அமைப்பின் ஆதரவாளராக இருப்பது தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவியுள்ளதை அடுத்து UM உள்நிலை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல்களைப் பெறவும், முன்வைக்கப்பட்டச் குற்றச்சாட்டுகளை ஆராயவும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக UM வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்த விசாரணை, நடைமுறையில் உள்ள சட்ட விதிகள், பல்கலைக்கழக ஒழுங்குமுறைகளுக்கு இணங்க நடத்தப்படும் என பல்கலைக்கழகம் உறுதி அளிக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், இணையப்பயனர்கள் பகிர்ந்த பதிவுகளில், UM-இன் ஒரு பேராசிரியர் தன்னை வெளிப்படையாக ஃப்ரீமேசன் அமைப்பின் உறுப்பினராகக் கூறியதுடன், மதுபானம் அருந்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருக்கவும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பவோ அல்லது ஊகங்களை உருவாக்கவோ தவிர்க்குமாறு UM அறிவுறுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 2:07 pm
பியூஃபோர்டில் வெள்ளம் பாதிப்பு: 9 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன
February 12, 2026, 1:52 pm
செக்கு சந்திரா கைது: போலிஸ்
February 12, 2026, 1:34 pm
மிசி திட்டம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் வெற்றி மடானி திட்டமாக தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
February 12, 2026, 12:46 pm
பள்ளிகளில் அதிகரிக்கும் பகடிவதை சம்பவங்கள்: 2,889 வழக்குகள் பதிவாகியுள்ளன
February 12, 2026, 12:22 pm
சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கிய இரு நிறுவன நிர்வாகிகளுக்கு தலா RM10,000 அபராதம்
February 12, 2026, 11:20 am
முன்னாள் மலாக்கா முதல்வரின் அரசியல் செயலாளர், அரசு துறை தலைவர்களைக் காவலில் வைக்க SPRM கோரியுள்ளது.
February 12, 2026, 10:40 am
கோத்தா கினபாலுவில் அதிர்ச்சி சம்பவம்: குப்பை கொட்டும் இடத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது
February 12, 2026, 10:32 am
