நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் மலாக்கா முதல்வரின் அரசியல் செயலாளர், அரசு துறை தலைவர்களைக் காவலில் வைக்க SPRM கோரியுள்ளது.

புத்ராஜெயா: 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) இன்று, இரண்டு தனித்தனியான வழக்குகள் தொடர்பாக நான்கு நபர்களைக் காவலில் வைக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் மலாக்கா முதல்வரின் முன்னாள் அரசியல் செயலாளரும் அவரது மனைவியும் மலாக்கா சுற்றுப்புற கடல் நிரப்பு திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஒரு நிறுவனத்திற்கு வழங்க உதவியதற்குப் பதிலாக, சுமார் 30 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணையில், ‘டத்தோ விரா’ பட்டம் பெற்ற சந்தேக நபர், 2021 பிப்ரவரி முதல் நவம்பர் வரை இந்தச் செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, இரண்டாவது வழக்கு, ஒரு அரசு துறையின் உயர்நிலை நிர்வாக அதிகாரிகளான தலைமை இயக்குநர், இயக்குநர் பதவியில் உள்ள இருவர்  2024ஆம் ஆண்டில் சுமார் RM9 லட்சம் நிதியைத் தவறாக பயன்படுத்தியதில் உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில், நேற்று பிற்பகல் 1 மணியளவில் புத்ராஜெயா SPRM தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள், துறை நிதியான சுமார் RM9 லட்சத்தைத் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் தங்களின் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 4 வரை ஜித்தாவில் அதிகாரப்பூர்வ பணியில் இருந்தபோது உம்ரா மேற்கொண்டதற்காக, சுமார் RM60,000 மதிப்புள்ள போலி கோரிக்கைகள், தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

நான்கு சந்தேக நபர்களும் இன்று காலை 9.10 மணியளவில் SPRM வாகனத்தில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset