செய்திகள் மலேசியா
பள்ளிகளில் அதிகரிக்கும் பகடிவதை சம்பவங்கள்: 2,889 வழக்குகள் பதிவாகியுள்ளன
கோலாலம்பூர்:
கடந்த ஆண்டுகளில் நாட்டில் 2,889 பகடிவதை வழக்குகள் பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார். இதில் 740 வழக்குகள் ஆரம்பப் பள்ளிகளிலும், 2,149 வழக்குகள் இடைநிலைப் பள்ளிகளிலும் இடம்பெற்றுள்ளன.
இவ்விவகாரத்தை சமாளிக்க அமைச்சகம் உடனடி கல்வி அமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும், 1,758 பள்ளிகள் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதாரம் அமைச்சு, உள்துறை அமைச்சு, மகளிர் அமைச்சு, குடும்பம் சமூக மேம்பாட்டு அமைச்சகங்கள் உள்ளிட்ட பல அமைச்சகங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் (PIBG), சமூகங்கள், தனியார் துறை அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பகடிவதை அல்லது பாலியல் தொடர்பான நிலையான செயற்பாட்டு நடைமுறைகள் திருத்தப்பட்டதுடன், புகாரளிப்போரின் ஆவணத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் புகார் முறைமையும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 523 புதிய வழிகாட்டி, ஆலோசனை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 200 விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மூன்று மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 2:07 pm
பியூஃபோர்டில் வெள்ளம் பாதிப்பு: 9 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன
February 12, 2026, 1:52 pm
செக்கு சந்திரா கைது: போலிஸ்
February 12, 2026, 1:34 pm
மிசி திட்டம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் வெற்றி மடானி திட்டமாக தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
February 12, 2026, 12:22 pm
சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கிய இரு நிறுவன நிர்வாகிகளுக்கு தலா RM10,000 அபராதம்
February 12, 2026, 12:06 pm
ஃப்ரீமேசன் ஆதரவாளராக மூத்த பேராசிரியர் மீது குற்றச்சாட்டு:விசாரணையைத் தொடங்கியுள்ளது மலாயா பல்கலைக்கழகம்
February 12, 2026, 11:20 am
முன்னாள் மலாக்கா முதல்வரின் அரசியல் செயலாளர், அரசு துறை தலைவர்களைக் காவலில் வைக்க SPRM கோரியுள்ளது.
February 12, 2026, 10:40 am
கோத்தா கினபாலுவில் அதிர்ச்சி சம்பவம்: குப்பை கொட்டும் இடத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது
February 12, 2026, 10:32 am
