செய்திகள் மலேசியா
சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கிய இரு நிறுவன நிர்வாகிகளுக்கு தலா RM10,000 அபராதம்
கோலா திரங்கானு:
தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வளாகங்களில், சட்டவிரோத குடியேறிகளை (PATI) தங்க அனுமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு உள்ளூர் ஆண்களுக்கு, நீதிமன்றம் இன்று தலா RM10,000 அபராதம் விதித்தது.
நீதிபதி நஸ்லிசா முஹம்மது நஸ்ரி, 39 வயதான முஹம்மது ஃபஹ்ரிசல் மாட் ஜின், 36 வயதான லியோனார்டோ லிங் சோய் செங் ஆகியோருக்கு குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டதும் தண்டனை வழங்கினார். அபராதம் செலுத்தத் தவறினால் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல் வழக்கில், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான முகமது ஃபஹ்ரிசல் மாட் ஜின், கடந்த டிசம்பர் 9 அன்று கம்போங் குபாங் ஜம்புவில் உள்ள இருமாடி வீட்டு கட்டுமான தளத்தில், இந்தோனேசியாவைச் சேர்ந்த இரண்டு சட்டவிரோத குடியேறிகளை செல்லுபடியாகும் ஆவணமின்றி தங்க அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இரண்டாவது வழக்கில், நிறுவனம் மேலாளரான லியோனார்டோ லிங் சோய் செங், கடந்த ஜனவரி 28 அன்று கெர்தே, கெமாமானில் உள்ள பயோ-பாலிமர் பூங்கா பகுதியில் அமைந்த தொழிலாளர் தங்குமிடத்தில், வங்காளதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தங்க அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இவ்விரு குற்றச்சாட்டுகளும் குடியேற்றச் சட்டம் பிரிவு 55E(1) கீழ் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளுக்கும் RM5,000 முதல் RM30,000 வரை அபராதம் அல்லது அதிகபட்சம் 12 மாதங்கள் சிறை வழங்கப்படலாம்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 2:07 pm
பியூஃபோர்டில் வெள்ளம் பாதிப்பு: 9 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன
February 12, 2026, 1:52 pm
செக்கு சந்திரா கைது: போலிஸ்
February 12, 2026, 1:34 pm
மிசி திட்டம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் வெற்றி மடானி திட்டமாக தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
February 12, 2026, 12:46 pm
பள்ளிகளில் அதிகரிக்கும் பகடிவதை சம்பவங்கள்: 2,889 வழக்குகள் பதிவாகியுள்ளன
February 12, 2026, 12:06 pm
ஃப்ரீமேசன் ஆதரவாளராக மூத்த பேராசிரியர் மீது குற்றச்சாட்டு:விசாரணையைத் தொடங்கியுள்ளது மலாயா பல்கலைக்கழகம்
February 12, 2026, 11:20 am
முன்னாள் மலாக்கா முதல்வரின் அரசியல் செயலாளர், அரசு துறை தலைவர்களைக் காவலில் வைக்க SPRM கோரியுள்ளது.
February 12, 2026, 10:40 am
கோத்தா கினபாலுவில் அதிர்ச்சி சம்பவம்: குப்பை கொட்டும் இடத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது
February 12, 2026, 10:32 am
