நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா கினபாலுவில் அதிர்ச்சி சம்பவம்: குப்பை கொட்டும் இடத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது

கோத்தா கினபாலு:

சபாவின் இன்டா பெர்மாய் பகுதியில், இன்று காலை சுமார் 7 மணியளவில் குப்பை கொட்டும் இடத்தில் முழுமை இல்லாத நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதால் குடியிருப்போர் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த சடலம் ஒரு பெண்ணுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சம்பவ இடத்தில் குப்பைகளை ஏற்றுவதற்காக வந்த குப்பை லாரி பணியாளர் முதலில் அந்த சடலத்தை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள போலீசார் தற்போது சம்பவ இடத்தில் உள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset