செய்திகள் இந்தியா
இந்தியாவில் 7 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்: இதுவரை 83000 பள்ளிகளில் 1 கோடி மாணவர்கள் புதுப்பித்துள்ளனர்
புதுடெல்லி:
இந்தியாவில் ஐந்து வயது முதல் 15 வயதை கடந்த குழந்தைகளுக்கு ஆதாரில் கைரேகைகள், கருவிழித் தகவல்களை புதுப்பிப்பது கட்டாயமாகும்.
இதனால், 7 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்க கடந்த அக்டோபர் 1 முதல் ஒரு வருடத்திற்கு எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) பள்ளிகளில் சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது.
இது குறித்து யுஐடிஏஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இதுவரை சிறப்பு முகாம்களில் நாடு முழுவதும் 83 ஆயிரம் பள்ளிகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் பயோமெட்ரிக் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த முகாம்கள் தொடர்ந்து அடுத்தடுத்த பள்ளிகளில் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள ஆதார் பதிவு மையங்கள், ஆதார் சேவா கேந்திராங்களிலும் பயோமெட்ரிக் புதுப்பிக்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
