செய்திகள் கலைகள்
எனது முழு பெயர் தபசும் ஃபாத்திமா: மனம்திறந்த நடிகை தபு
ஹைதராபாத்:
எனக்கு 3 வயதாக இருந்தபோது என்னுடைய பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டனர். அதன் பிறகு எனது தந்தையுடன் எனக்கு எந்த வித தொடர்பும் கிடையாது.
எனது பெற்றோர் விவாகரத்து செய்து கொண்ட பிறகு நான் என்னுடைய பாட்டி (அம்மாவின் தாயார்) வீட்டில் வளர்ந்து வந்தேன். எனது அம்மா ஓர் ஆசிரியை. இதனால் அதிகமான நேரத்தை எனது பாட்டியுடன் கழித்தேன்.
எனது பாட்டி புத்தகம் படிப்பது, தொழுகை செய்வது என்று நேரத்தை செலவிட்டார். நானும் அது போன்ற ஒரு சூழலில் வளர்ந்தேன். எனவே நான் எனது தந்தையை சந்திக்க விரும்பவில்லை. எனது தந்தையின் பெயரை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தேன். எனவேதான் எனது பெயருக்குப் பின்னால் அவரது பெயரை சேர்க்கவில்லை.
எனது தந்தையின் பெயர் ஹஸ்மி. எனது முழு பெயர் தபசும் ஃபாத்திமா ஆகும். பள்ளியில் எனது சர்நேம் ஃபாத்திமா ஆகும். எனது தந்தையை பற்றிய எந்த நினைவும் என்னிடம் இல்லை. எனது சகோதரி ஒரு முறை அவரை சந்தித்து இருக்கிறார். ஆனால் நான் அவரை சந்திக்க விரும்பவில்லை. நான் இப்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்'' என்றார்.
திருமணம் செய்யாமல் வாழ்வது குறித்து கேட்டதற்கு, ''நான் அதை பற்றி கவலைப்படவில்லை. நான் தனியாக இருக்கிறேனா அல்லது திருமணம் செய்திருக்கிறேனா என்பது பிரச்னை இல்லை'' என்று தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 11:52 am
ஓணம் ஓட்டத்தில் பிருத்விராஜின் கலிஃபாவை முந்திய நிவின் பாலியின் பெத்லகேம்
August 22, 2026, 4:18 pm
‘மோசமான’ திரைப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு
August 21, 2026, 5:34 pm
தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார்
August 19, 2026, 3:00 pm
நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் மோசமான வசூல்: ரசிகர்கள் ஏமாற்றம்
August 19, 2026, 2:38 pm
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முதல் சிங்கிள்: ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகிறது
August 18, 2026, 12:49 pm
நடிகை அனன்யா ராஜ் காலமானார்
August 17, 2026, 7:24 pm
ஜன நாயகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வரும் ஆக. 21 ஆம் தேதி வெளியாகிறது
August 17, 2026, 12:20 pm
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை
August 13, 2026, 5:40 pm
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும்: சூர்யா நம்பிக்கை
August 13, 2026, 11:42 am
