செய்திகள் சிந்தனைகள்
மனிதக் குழந்தையும் சிம்பன்சி குட்டியும் - வெள்ளிச் சிந்தனை
1931-ஆம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் அறிஞர் வின்த்ரோப் கெல்லாக் அவரது மனைவி லூயெல்லா ஆகியோர் விசித்திரமான ஒரு சோதனையைச் செய்தார்கள்.
சோதனை இதுதான்: மனிதக் குழந்தையும் சிம்பன்சி குட்டியும் ஒரே சூழலில் வளர்ந்தால், சிம்பன்சி மனிதர்களைப் போலப் பேசவோ அல்லது பழகவோ கற்றுக்கொள்ளுமா என்பதைக் கண்டறிய விரும்பினார்கள்.
அதற்காக தங்களின் 10 மாதக் குழந்தையுடன் குவா (Gua) என்ற 7 மாத சிம்பன்சி குட்டியைச் சேர்த்து வளர்த்தனர்.
அவர்கள் குவாவை ஒரு செல்லப் பிராணியாகப் பார்க்காமல் குழந்தைக்குச் சமமாக நடத்தினார்கள். குழந்தைக்குக் கொடுத்த அதே உடைகள், உணவு, தூக்கம், முத்தங்கள் குவாவுக்கும் வழங்கப்பட்டன.
ஆரம்பத்தில் குவா மனிதக் குழந்தையை விட வேகமாகச் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டது. (காலணி அணிவது, கரண்டியால் உண்பது மற்றும் கதவுகளைத் திறப்பது). ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அதிர்ச்சியான மாற்றம் ஏற்பட்டது.
என்ன தெரியுமா…? சிம்பன்சி மனிதனைப் போலப் பேசக் கற்றுக்கொள்ளவில்லை. மாறாக, சிறுவன் சிம்பன்சியைப் போல ஒலிகளை எழுப்பவும், ஜன்னலில் ஏறவும், அதன் குணாதிசயங்களைப் பின்பற்றவும் தொடங்கினான்.
தனது மகனின் பேச்சுத் திறன் பாதிக்கப்படுவதைக் கண்டு பயந்த கெல்லாக், 9 மாதங்களிலேயே அந்தச் சோதனையை நிறுத்திவிட்டார்.
அந்தச் சோதனை "The Ape and the Child" என்ற பெயரில் உளவியல் வரலாற்றில் இன்றும் ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியதுதான் இதுதான்…
"குழந்தைகளுக்குத்தான் நற்பயிற்சி தேவைப்படுகிறதே தவிர விலங்குகளுக்கு அல்ல!”
என்னதான் பயிற்சி கொடுத்தாலும் விலங்குகள் தமது இயற்கை அமைப்பில் இருந்து ஒருபோதும் மாறுவதில்லை. ஆனால் மனிதன் வேகமாக மாறுவான்.
அதனால்தான் நபி (ஸல்) கூறினார்கள்: 'ஒரு தந்தை தன் பிள்ளைக்குக் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு நல்லொழுக்கம்தான்’
சிறு பிள்ளைகளுக்கு மொபைல் போன் கொடுக்கும்போது அதீத எச்சரிக்கை உணர்வு தேவை. அவ்வளவுதான் நம்மால் சொல்ல முடியும்.
http://scienceandculture.com/2023/10/when-a-child-and-a-chimp-were-raised-together/
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
