நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்நாடு முதல்வரின் அயலகத் தமிழர்கள் தொழிலாளர் நலத்திட்டங்களை மலேசியாவில் கொண்டு சேர்க்க NRTIA பிரதிநிதிகள் பிரஸ்மா தலைமையுடன் சந்திப்பு

கோலாலம்பூர்:

மலேசியாவில் பணிபுரியும் தமிழகத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழ்நாடு  முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலில் செயல்படும் நலத்திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்கவும், மலேசிய வெளிநாடு வாழ் தமிழர் நலச் சங்கமும் (NRTIA Malaysia) மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமும் (PRESMA) இடையே ஒரு முக்கியக் கலந்துரையாடல் நடைபெற்றது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கெனத் தனி வாரியம் (NRT Welfare Board) அமைத்து, அவர்களுக்குப் பேரிடர் காலங்களிலும், வாழ்வாதார நெருக்கடிகளிலும் உடனடி உதவிகளை தமிழக அரசு வழங்கி வருவதை இக்கூட்டத்தில் NRTIA பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

முதல்வரின் திட்டங்கள் குறித்து பிரஸ்மா தலைவருக்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் ஃபிர்தௌஸ் கான் விளக்கம் தந்தார்.

அயலகத் தமிழர் நல வாரியக் காப்பீடு,
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி, திருமண நிதியுதவிகள். ஓய்வூதியத் திட்டங்கள், பணி முடிந்து தாயகம் திரும்பும் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கான சேமிப்புத் திட்டங்கள் ஆகியனவாகும்.

பிரஸ்மா, இந்தத் திட்டங்கள் குறித்து இந்தியத் தூதரகம் உத்தராவாதம் அளித்தால் சங்க உறுப்பினர்களுக்கு இது குறித்து தெரிவிப்பதாக தலைவர் டத்தோ முஹம்மது மொஹ்சின் கூறினார். 

இந்தியத் தூதரகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானால் தங்கள் உணவகங்களில் பணிபுரியும் அனைத்துத் தமிழகத் தொழிலாளர்களையும் இந்த நல வாரியத்தில் இணைத்து, அவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய பிரஸ்மா தயாராக உள்ளது என்று தலைவர் கூறினார். 
 
பிரஸ்மா சங்கத்தின் சார்பில் தலைவர்  துணைத்தலைவர் முஹிபுல்லா கான், உதவித் தலைவர்கள் டத்தோ சையத் அபுதாஹிர், 
முஹம்மது, சிராஜுதீன், செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் பொருளாளர் நசருதீன், செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

NRTIA மலேசியா தலைவர்  MSB. முஹம்மது பிர்தௌஸ் கான், செயலாளர் ஜான் ரீகன் கலந்து கொண்டனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset