நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணிக்கு மக்களின் குரலாகவும் ஆதரவாகவும் பிபிபி கட்சி இருக்கும்: டத்தோ லோகபாலா

கோலாலம்பூர்:

தேசிய முன்னணிக்கு மக்களின் குரலாகவும் ஆதரவாகவும் பிபிபி கட்சி தொடர்ந்து இருக்கும்.

பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இதனை தெரிவித்தார்.

நாட்டில் ஒரு மூத்த அரசியல் கட்சியாக பிபிபி விளங்குகிறது.

இன்று 72 மாவது தேசிய பேராளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
பல்லின மக்கள் அனைவரும் பிபிபி கட்சியில் உறுப்பினராக உள்ளனர்.

தற்போது நாடு தழுவிய அளவில் 3,200 கிளைகளுடன் 3 லட்சத்து 22,000 உறுப்பினர்களுடன் பிபிபி வெற்றி நடை போடுகிறது.

மலேசியர்களின் குரலாக பிபிபி தொடர்ந்து விளங்கும் வேளையில் தேசிய முன்னணிக்கு முழு வலிமையாகவும்  பிபிபி கட்சி இருக்கும் என்று அவர் சொன்னார்.

பிபிபி கட்சியின்  72 ஆவது தேசிய பேராளர் மாநாடு இன்று  புத்ரா வாணிப மையத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடு தழுவிய அளவில் 5,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset