செய்திகள் மலேசியா
பிபிபி தேசிய முன்னணியில் உறுப்பு கட்சி: ஜாஹித் அறிவிப்பு
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியில் பிபிபி கட்சி மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை அறிவித்தார்.
பிபிபி கட்சியின் 72 தேசிய பேராளர் மாநாடு அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் தொடக்கி வைத்து பேசிய அவர், தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக பிபிபி இருந்து வருகிறது.
ஒரு கட்டத்தில் அக்கட்சி தேசிய முன்னணியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் தொடங்கிய சர்ச்சைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.
பிபிபி கட்சி இன்னமும் தேசிய முன்னணியில் உறுப்பு கட்சியாக உள்ளது.
சங்கங்களின் பதிவிலாக கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய முன்னணிக்குள் பிபிபி கட்சியின் சட்ட நிலைப்பாட்டை எந்தக் கட்சியும் மறுக்க முடியாது.
வரும் ஜனவரி 21 ஆம் தேதி, கோத்தா கினபாலுவில் நடைபெறும் தேசிய முன்னணி உச்ச மன்றக் கூட்டத்தில், பிபிபி தலைவர் அழைக்கப்பட்டு, ஒரு சிறப்பு நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கிய ஒரு சம்பிரதாயம் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
அதன் அடிப்படையில் பிபிபி கட்சி இனி தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக செயல்படும்.
இனி தேசிய முன்னணியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பிபிபி கட்சி செயல்பட வேண்டும் என்று ஜாஹித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 18, 2026, 2:15 pm
தேசிய முன்னணிக்கு மக்களின் குரலாகவும் ஆதரவாகவும் பிபிபி கட்சி இருக்கும்: டத்தோ லோகபாலா
January 18, 2026, 11:45 am
மஹிமாவில் இணையும் ஆலயங்கள், அரசு சாரா இயக்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: டத்தோ சிவக்குமார்
January 18, 2026, 10:02 am
அம்னோவை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதற்காக சிவப்பு கைகள் முயற்சி: ஹசான்
January 18, 2026, 9:01 am
அன்வார் அம்னோவை நேசிப்பதுடன் கட்சியை நம்புகிறார்: ஜாஹித்
January 18, 2026, 8:40 am
நாடியா கெசுமா மாரடைப்பு காரணமாக ஜெட்டாவில் மரணமடைந்தார்
January 17, 2026, 9:25 pm
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் ஜனவரி 30ஆம் தேதி பத்துமலைக்கு வருகிறார்: டான்ஸ்ரீ நடராஜா
January 17, 2026, 2:24 pm
