நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஹிமாவில் இணையும் ஆலயங்கள், அரசு சாரா இயக்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: டத்தோ சிவக்குமார்

பத்துமலை:

மஹிமாவில் இணையும் ஆலயங்கள், அரசு சாரா இயக்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

பத்துமலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள சுவாமி மண்டபமும் வைகாசி விசாக உபயத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட தண்ணீர் பந்தலும் நேற்று திறப்பு விழா கண்டது.

அதே வேளையில் அருணகிரிநாதர் அருளிய நயவுரையுடன் கூடிய திருப்புகழ் நூலும் வெளியீடு கண்டது.

இம்மாபெரும் விழாவில் முக்கிய அங்கமாக கிட்டத்தட்ட 28 ஆலயங்களும் அரசு சாரா இயக்கங்களும் மஹிமாவில் இணைந்தன.

இணைந்த ஆலயம், இயக்கங்களுக்கு மஹிமா உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மஹிமாவில் இணைந்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 1500ஆக உயர்ந்துள்ளது.

ஆலயங்களையும் அரசு சாரா இயக்கங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் தான் மஹிமா தொடங்கப்பட்டது.

இந்த இலக்கை அடைவதற்காக மஹிமா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset