நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் மு.க.ஸ்டாலினின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். 

சென்னை:

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும் கூட தொற்றுக்கு ஆளாகி வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஆனால் விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளார்.

முகமது சாகுல் அமீது என்ற அந்த மாணவரின் கண்டுபிடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திமுக தலைவரும், தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளவருமான மு.க.ஸ்டாலினும் அந்த மாணவரை இதற்காக பாராட்டியுள்ளார். பேட்டரியில் இயங்கும் கார் ஒன்றை முகமது சாகுல் அமீது உருவாக்கியுள்ளார். இதில், வைஃபை வசதியும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இந்த காரில் தட்டு வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான உணவு மற்றும் மருந்தை இந்த தட்டில் வைத்து அனுப்ப முடியும். மேலும் இந்த காரில் கேமரா வசதியும் இருக்கிறது. இதன் மூலம் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன், மருத்துவர்கள் கலந்துரையாடலாம். ஆலோசனைகளை வழங்கலாம்.

இதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும். இந்த பேட்டரி காரை உருவாக்கியதற்காக, கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில், இளம் விஞ்ஞானிக்காக கலாம் விருது முகமது சாகுல் அமீதுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset