நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத் தேர்தல் வரை அம்னோ தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன: ஜாஹித்

கோலாலம்பூர் -
நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் வரை அம்னோ தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

இந்த ஆண்டு நடைபெறவிருந்த அம்னோ தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த தேர்தல் நடத்தப்படும்.

இன்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில்  ஹலால் தொழில்துறையில் பெண்கள் வேளாண்மை பொருட்கள் கண்காட்சியுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

இதில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதை உறுதிப்படுத்தினார்.

கட்சியின் இரண்டு உயர்ந்த பதவிகள் அம்னோ தேர்தல்களில் போட்டியிடப்படுமா என்று கேட்டதற்கு, 16ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அந்த விஷயமும் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் ஒத்திவைப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், அது முன்னர் திருத்தப்பட்ட அம்னோ சட்டவிதியில்  உள்ளது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset