நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை இரண்டாவது ஆற்றங்கரை விவகாரம் குறித்து டான்ஸ்ரீ நடராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: குணராஜ்

பெட்டாலிங்ஜெயா:

பத்துமலை இரண்டாவது ஆற்றங்கரை விவகாரம் குறித்து ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் தைப்பூச பணிக் குழு தலைவருமான குணராஜ் இதனை கூறினார்.

பத்துமலை தைப்பூச விழாவில் இரண்டாவது ஆற்றங்கரை பக்தர்களுக்கு பெரும் பயனாக இருந்து வருகிறது.

ஆனால் இட நெருக்கடி காரணமாக இரண்டாவது ஆற்றங்கரைக்கு செல்லும் வழி பூட்டப்படுகிறது.

இவ்வாண்டு அப்பிரச்சினை நடக்காமல் இருக்க டான்ஸ்ரீ நடராஜாவுடன பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

அவர் அனுமதி கொடுத்தால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக் காணப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

அதே வேளையில் போலிஸ், செலயாங் நகராண்மைக் கழகம் ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

இதனிடயே நாடு முழுவதும் உள்ள முருகப் பெருமான ஆலயங்களில் தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இந்த தைப்பூச விழாக்கள் முறையாக
நடைபெறுவதற்கு ஆலய நிர்வாகங்கள் முழு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதே வேளையில் இவ்விழா சமய நெறியுடன், பாதுகாப்பாக, சுத்தமாக நடைபெற வேண்டும் என்பது தான் தைப்பூச பணிக் குழுவின் இலக்காக இருந்தது.

தைப்பூச பணிக் குழு தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டது.

நீண்ட ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக இந்த பணிக் குழு பல வெற்றியை கண்டுள்ளது. இருந்தாலும் இவ்வாண்டு தனது நடவடிக்கைகளை இப்பணி குழு தொடரவுள்ளது.

பத்துமலை, சுங்கப்பட்டாணி, கோல சிலாங்கூர், ஈப்போ, பினாங்கு உட்பட பல முருகன் ஆலயங்களில் நடவடிக்கை குழுவினர் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இதில் பத்துமலையில் மட்டும் கிட்டத்தட்ட 300 தொண்டூழியர்கள் தங்களின் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

அதே வேளையில்  தைப்பூச விழாவின் போது மதுபான விற்பனை, போக்குவரத்து நெரிசல், குப்பைகள் அகற்றுவது, மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது என அனைத்து விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும்.

இப்பிரச்சினைகளை தடுக்க கோம்பாக் மாவட்ட போலிஸ்படை, செலயாங் நகராண்மைக் கழகம், ஆலய நிர்வாகம் ஆகியவற்றுடன் பணிக் குழு இணைந்து செயல்படும்.

மேலும் கார் நிறுத்துமிடத்துவதற்கு சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் நபர்களுக்கு எதிராக போலிசார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல், கார் நிறுத்துமிடம் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க பக்தர்கள் முடிந்தால் பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டும்.
ஆக மொத்தத்தில் தைப்பூச விழாவை

பக்தர்கள் சமய நெறியோடு இந்த விழாவை கொண்டாட வேண்டும்.
இதுவே தைப்பூச பணிக் குழுவின் வேண்டுகோள் என்று குணராஜ் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset