நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓலக் லெம்பிட் தொழிற்சாலயில் தீ விபத்து: மூன்று பேர் உயிரிழப்பு

சிப்பாங்:

கோலா லங்காட் மாவட்டம், ஓலாக் லெம்பிட்டில் அண்மையில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் மூவர் கருகி உயிரிழந்த சம்பவத்தின் காரணத்தை கண்டறிய, மலேசிய தீயணைப்பு மீட்பு துறை (JBPM) வழங்கும் தடயவியல் அறிக்கைக்காக காவல்துறை காத்திருக்கிறது என்று சிலாங்கூர் மாநில காவல் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறினார்.

தற்போது வரை தீ விபத்திற்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை என்றார் அவர்.

“தீயணைப்பு துறை தீ விபத்து தொடர்பான தடயவியல் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அவர்களின் அறிக்கை கிடைத்த பிறகே மேலதிக தகவல்களையும் அடுத்த நடவடிக்கைகளையும் தீர்மானிக்க முடியும்,” என அவர் தெரிவித்தார்.

கேஎல்ஐஏ (KLIA) மாவட்ட காவல் தலைவர்  பணி பரிமாற்ற விழாவுக்குப் பிறகு, கேஎல்ஐஏ (KLIA) மாவட்ட காவல் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை கூறினார்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset