நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியக் கல்வி கூட்டுறவு சங்கம் B40 மாணவர்களுக்கு 15 மில்லியன் கல்வி நிதியுதவியை வழங்கியுள்ளது

சைபர்ஜெயா:

மலேசியக் கல்வி கூட்டுறவு சங்கம் (KPMB), குறைந்த வருமானமத்தை கொண்ட,  B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவியாக இந்த ஆண்டில் RM15 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. 

இதன் மூலம் 1,500 மாணவர்கள் பாதுகாப்பு , விசாரணை துறைகளில் மேல்கல்வி தொடர முடியும்.

இந்த நிதி, மலேசியா கல்வி கூட்டுறவு சங்கம் (KPMB), மலேசிய பாதுகாப்பு விசாரணை கல்விக் கல்லூரி (KPKPM) இடையிலான ஒத்துழைப்பின் மூலம் வழங்கப்படுகிறது. 

இதன் நோக்கம், வசதி குறைவான பெற்றோரின் பொருளாதார சுமையை குறைப்பதாகும்.

மலேசியா கல்வி கூட்டுறவு சங்கம் (KPMB) தலைவர் டத்தோ ஷம்சுதீன் பாய், “கல்வி என்பது நாட்டின் நீண்டகால முதலீடு. இந்த முயற்சியின் மூலம் நிலைத்த, வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட கல்விப் பாதையை உருவாக்க முடியும்,” என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மலேசிய பாதுகாப்பு விசாரணை கல்விக் கல்லூரி, தொழில்துறை தேவைகளுக்கும் தேசிய பாதுகாப்பு கோரிக்கைகளுக்கும் ஏற்ப பயிற்சிகளை வழங்குகிறது. 

இங்கு டிப்ளோமா காவல் துறை, குடிவரவு, எல்லைக் கட்டுப்பாடு, ஊழல் தடுப்பு நிர்வாகம், சட்ட அமலாக்கம் ஆகிய டிப்ளோமா பாடநெறி திறன் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.

• குடியேற்றமும் எல்லை தாண்டிய கட்டுப்பாட்டிலும் டிப்ளோமா
• ஊழல் எதிர்ப்பு  நல்லாட்சியில் 
• காவல் துறையில் டிப்ளோமா
• சட்ட அமலாக்கத்தில் டிப்ளோமா
• சட்ட அமலாக்கத்தில் சான்றிதழ்
• பாதுகாப்பு சேவை செயல்பாடுகளில் மலேசிய திறன் சான்றிதழ் (SKM)

வசதியற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் RM16,450 அல்லது டிப்ளோமா படிப்புக்கான கல்விக் கட்டணத்தில் 50% நிதியுதவி வழங்கப்படும். இதனால் அவர்கள் தொடக்ககட்டத்தில் கட்டணமின்றி படிப்பை தொடங்கலாம்.

B40 மாணவர்கள், பதிவு கட்டணமாக RM2,900 மட்டும் செலுத்தினால் போதுமானது; மேலும் 30% கல்வி நிதியுதவியும் வழங்கப்படும்.

மேலும், உறுப்பினர்களின் குழந்தைகளது கல்வி தேவைகளை ஆதரிக்க எளிதான கடன் வசதியை வழங்க மலேசியா கல்வி கூட்டுறவு சங்கம் இறுதிக்கட்ட திட்டமிடலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset