செய்திகள் மலேசியா
ஈகைப் பெருநாளை முன்னிட்டு கிளாந்தானுக்கு செல்லும் பயணச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன
கோலாலம்பூர்:
நோன்புப் பண்டிகையான ஈகைத் திருநாளை முன்னிட்டு, தெற்கு ஒருங்கிணைந்த முனையத்தில் (TBS) நாட்டின் முக்கிய இடங்களுக்கான விரைவுப் பேருந்து பயணச்சீட்டுகள் இன்னும் கையிருப்பில் உள்ளன. இருப்பினும், கிளாந்தான் மாநிலத்தின் கோத்தா பாரு, மாச்சாங், பாசிர் மாஸ் போன்ற இடங்களுக்கான பயணச்சீட்டுகள் மிக வேகமாக விற்றுத் தீர்ந்து வருவதாகத் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மார்ச் 17-ஆம் தேதிக்கான இரவு நேரப் பயணச்சீட்டுகள் மட்டுமே சில எஞ்சியுள்ள நிலையில், மார்ச் 18, 19 ஆகிய தேதிகளுக்கான பயணச்சீட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டன.
அதேபோல், கிளாந்தானின் பாசிர் பூத்தே பகுதிக்குச் செல்வதற்கான பயணச்சீட்டுகளும் மார்ச் 17 முதல் 19 வரை கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், திரெங்கானு, பகாங் ஆகிய கிழக்குக் கரை மாநிலங்களுக்கும், கெடா, பினாங்கு, பெர்லிஸ் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும், தெற்கு மாநிலங்களுக்கும் செல்வதற்கான பயணச்சீட்டுகள் இன்னும் தாராளமாகக் கிடைக்கின்றன. இருப்பினும், பண்டிகை நெருங்குவதால் அடுத்த வாரம் முதல் தேவை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை தெற்கு, வடக்கு நோக்கிய பயணங்களுக்குப் போதிய இடங்கள் இருந்தாலும், பயணத்தைத் திட்டமிடும் பொதுமக்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அனைத்து இடங்களிலும் செயல்படுத்த முடியாது: சைட் ஹுசைன்
March 13, 2026, 6:54 pm
மலாயாவின் முதல் பெண் தலைமை நீதிபதி சித்தி நோர்மா யாகோப் காலமானார்
March 13, 2026, 6:33 pm
சிலிம்ரீவர் ஸ்ரீ மகா லெட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது: டத்தோ சிவக்குமார்
March 13, 2026, 5:34 pm
