செய்திகள் மலேசியா
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
கோலாலம்பூர்:
கிட்டத்தட்ட 66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தைக்குபிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சிறப்பு வருகை புரிந்தார்.
2026 ஆம் ஆண்டில் நோன்பு பெருநாளை இன்னும் துடிப்பான, பெரிய அளவிலான நிகழ்வோடு மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் இச்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்த விழாவின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இது மலேசியாவின் மிகப்பெரிய பெருநாள் சந்தைகளில ஒன்றாக அதன் நிலையை தொடர்ந்து வலுப்படுத்துகிறது.
மை ஈவென்ட்ஸ் இன்டர்நேஷனல் அப்சலூட் ஈவென்ட்ஸ் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு,
உள்ளூர் தொழில்முனைவோர், உள்ளூர் பிராண்டுகள், பார்வையாளர்கள் தொழில்முனைவோர் நிறைந்த ஒரு துடிப்பான திருவிழா சூழ்நிலையில் பெருநாள் ஷாப்பிங் அனுபவத்தை அனுபவிக்க ஒரு விரிவான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சந்தை தலைநகர் மைடேக்கில் இன்று நண்பகல் 12 மணி முதல் மார்ச் 16 காலை 6 மணி வரை 66 மணிநேர இடைவிடாத நிகழ்வாக நடைபெறுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த சந்தை பல ஈர்க்கக்கூடிய சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.
இதில் 61.5 மில்லியன் ரிங்கிட் விற்பனையை ஈட்டியது.
2,432 பங்கேற்கும் வணிக தளங்களைப் பதிவு செய்தது, மொத்தம் 7.96 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது ஆகியவை இதில் அடங்கும்.
இந்நிலையில் இவ்வாண்டுக்கான சந்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திடீர் வருகை தந்ததன் மூலம் இந்த விழாவின் உற்சாகம் அதிகரித்தது.
அவரது வருகையை பார்வையாளர்கள், வர்த்தகர்கள் அன்புடன் வரவேற்றனர்.
அவர்கள் நெருக்கமாக சந்தித்து உரையாடும் வாய்ப்பை தவறவிடவில்லை.
காயா ராயா சந்தையின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான அடையாளமாக டத்தோஸ்ரீ அன்வார் அடையாளமாக அனிச்சல் வெட்டினார்.
அதே போல் உள்ளூர் தொழில்முனைவோரின் கடைகளையும் பிரதமர் பார்வையிட்டார்.
மேலும் கூடுதலாக நூர் இக்மா தனித்து வாழும் தாய்மார்கள் சங்கம், விதுஸ் பெண்கள், தனித்து வாழும் தாய்மார்கள் நல சங்கம், காசி முர்னி காப்பகம், அகாடமி தஹ்ஃபிஸ் அல்-ஹிதாயா போன்ற பல தொண்டு நிறுவனங்களிலிருந்து 250 பேருக்கு சமூக கடப்பாட்டின் அடிப்படையில் உதவிகளும் வழங்கப்பட்டது.
இந்த முயற்சி சமூகத்தை ஒன்றிணைத்து, தேவைப்படுபவர்களுக்கு திருவிழாவை அனுபவிக்கவும், ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடவும் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அனைத்து இடங்களிலும் செயல்படுத்த முடியாது: சைட் ஹுசைன்
March 13, 2026, 6:54 pm
மலாயாவின் முதல் பெண் தலைமை நீதிபதி சித்தி நோர்மா யாகோப் காலமானார்
March 13, 2026, 6:33 pm
சிலிம்ரீவர் ஸ்ரீ மகா லெட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது: டத்தோ சிவக்குமார்
March 13, 2026, 5:35 pm
ஈகைப் பெருநாளை முன்னிட்டு கிளாந்தானுக்கு செல்லும் பயணச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன
March 13, 2026, 5:34 pm
