செய்திகள் மலேசியா
47,000 பட்டதாரிகளை உருவாக்கிய டேஃப் கல்லூரி 20 மில்லியன் ரிங்கிட் செலவில் பிரமாண்டமாக உருமாற்றம் காண்கிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
சிரம்பான்:
47,000 பட்டதாரிகளை உருவாக்கிய டேஃப் கல்லூரி 20 மில்லியன் ரிங்கிட் செலவில் பிரமாண்டமாக உருமாற்றம் காண்கிறது.
மஇகா தேசியத் தலைவரும் எம்ஐஇடி தலைவருமான டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
மஇகாவின் சாதனை தலைவர் துன் சாமிவேலு சிந்தனையில் டேஃப் கல்லூரி உருவானது.
இக்கல்லூரி இதுவரை 47,000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.
இந்த பட்டதாரிகள் இன்று சாதனையாளர்களாகவும் உள்ளனர்.
இந்நிலையில் இந்த கல்லுரியை உருமாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
எம்ஐஇடி இயக்குநர்களான டத்தோஸ்ரீ சரவணன், டத்தோ டி. மோகன் உட்பட அனைவரும் இதற்கு ஒப்புதல் வழங்கினர்.
டத்தோ டி. மோகனின் மேற்பார்வையில் இந்த பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 20 மில்லியன் ரிங்கிட் செலவில் டேஃப் கல்லூரி தற்போது உருமாற்றம் கண்டு வருகிறது.
20 மில்லியன் என்றாலும் இங்கு நடைபெறும் வேலைகளை பார்த்தால் 30 மில்லியன் ரிங்கிட் கூட போதாது.
அப்படி மிகவும் நவீனமாகவும் பிரமாண்டமாகவும் இந்த கல்லூரியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின் இந்த கல்லூரி நாட்டின் முன்னணி கல்லூரிகளாகவும் விளங்கும்.
குறிப்பாக மின்சார கார் பராமரிப்பு, மின்சாரம், வெல்டிங், சமையல் உட்பட பல துறைகள் இக்கல்லூரியில் போதிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் வரும் காலங்களில் இக்கல்லூரி பல சாதனை மாணவர்களை உருவாக்கும்.
டேஃப் கல்லூரியின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன் நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்துக் கொண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், ஏய்ம்ஸ்ட் கல்லூரி, டேஃப் கல்லூரி ஆகியவை நமது மாணவர்களுக்கு பெரும் உறுதுணையாக இருக்கும்.
குறிப்பாக அனைத்து மாணவர்களுக்கும் இக்கல்லூரிகள் பயனாக இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அனைத்து இடங்களிலும் செயல்படுத்த முடியாது: சைட் ஹுசைன்
March 13, 2026, 6:54 pm
மலாயாவின் முதல் பெண் தலைமை நீதிபதி சித்தி நோர்மா யாகோப் காலமானார்
March 13, 2026, 6:33 pm
சிலிம்ரீவர் ஸ்ரீ மகா லெட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது: டத்தோ சிவக்குமார்
March 13, 2026, 5:35 pm
ஈகைப் பெருநாளை முன்னிட்டு கிளாந்தானுக்கு செல்லும் பயணச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன
March 13, 2026, 5:34 pm
