நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாயாவின் முதல் பெண் தலைமை நீதிபதி சித்தி நோர்மா யாகோப் காலமானார்

கோலாலம்பூர்: 

நாட்டின் முதல் பெண் மலாயா தலைமை நீதிபதியாக பணியாற்றிய தான் ஸ்ரீ சித்தி நோர்மா யாகோப், இன்று 86 வயதில் காலமானார்.

அவரது மறைவு செய்தியை அவரது மகன் சில நேரங்களுக்கு முன் ஊடகங்களுக்கு அறிவித்தார்.

அல்லாஹ்யர்ஹம் கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிமோனியா நோயால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

1940 ஜூலை 6 ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் நகரில் பிறந்த சித்தி நோர்மா, நாட்டின் நீதித்துறை வரலாற்றில் பல முக்கிய சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். அதில், நாட்டின் முதல் பெண் உயர் நீதிமன்ற நீதிபதி, மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி, மலாயா தலைமை நீதிபதி என்ற பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதித்துறையில் 43 ஆண்டுகள் சிறப்பான சேவையை நிறைவு செய்த அவர், 2007 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset