செய்திகள் தமிழ் தொடர்புகள்
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள் பங்கேற்க ஏற்பாடு
மதுரை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 7 மணியளவில் தொடங்குகிறது.
இந்தப் போட்டியைக்காண தமிழகம் முழுவதும் இருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்கள் திரள்வர் என்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழர் திருநாளான தைப்பொங்கலையொட்டி மதுரை மாவட்டத்தில் அரசு சார்பில் நடக்கும் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தில் இன்று (ஜன. 15) காலை தொடங்குகிறது.
அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைக்கின்றனர்.
அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வாடிவாசல் வழியாக காளைகள், ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படும்.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,000 காளைகள் பங்கேற்கின்றன.
ஒரு மணி நேரத்தில் 80 முதல் 90 காளைகள் வரை வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500 மாடுபிடி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
இப் போட்டிக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சித்ரா, காவல் ஆணையர் லோகநாதன், அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தினர்.
வாடிவாசல், விழா மேடை, வீரர்கள் களமிறங்கும் இடம், காளைகளை பரிசோதனை செய்யும் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
இப்போட்டியை காண தமிழகம் முழுவதும் இருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்கள் திரள்வர் என்பதால், அவர்களுக்கான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறையை சேர்ந்த மருத்துவர்கள், ஊழியர்கள், அதிகாலை முதலே காளைகளை பரிசோதித்து அனுப்பும் பணியில் ஈடுபட உள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டி பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
வலைதள அறிவரங்கம்: மஜகவின் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடலில் உற்சாகம்
February 14, 2026, 9:44 am
நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாநாட்டுக்கு வரும்படி வீடுவீடாக சென்று அழைப்புவிடுக்கும் சீமானின் தாயார்
February 10, 2026, 12:32 pm
தமிழக தேர்தல் பரபரப்பு: 71 புதிய மாவட்டத் தலைவர்களை ராகுல் காந்தி திடீரென டெல்லிக்கு அழைத்திருக்கிறார்
February 9, 2026, 11:49 am
ரூ. 9,000 கோடியில் டாடா மோட்டாா்ஸ் காா் தொழிற்சாலையை பனப்பாக்கத்தில் முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்
February 9, 2026, 9:04 am
எந்த முறைகேட்டை மறைக்க TNPSC தேர்வு ரத்தானது?: தவெக தலைவர் விஜய் கேள்வி
February 8, 2026, 6:34 pm
கடும் பனிமூட்டத்தினால் சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு: திருப்பி அனுப்பப்பட்ட 7 விமானங்கள்
February 8, 2026, 3:19 pm
