செய்திகள் மலேசியா
குளியலறையில் மறைக்கப்பட்ட கைப்பேசி: மாற்றுத் தந்தையின் அருவருப்பான செயல் வெளிச்சம்
தவாவ்:
சொந்த குடும்ப உறுப்பினர்கள் குளிக்கும் காட்சியை மறைவாக பதிவு செய்ததாக சந்தேகத்தின் பேரில், 39 வயதுடைய ஒரு மாற்றுத் தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம், தவாவ் கம்போங் தஞ்சோங் பத்து லாட் பகுதியில் உள்ள வீட்டில், 12 வயது சிறுமி குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டு பதிவாகிக் கொண்டிருந்த கைப்பேசியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது.
தவாவ் மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் கூறுகையில், புகார் பெறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட கைப்பேசி பரிசோதனையில், மூன்று குடும்ப உறுப்பினர்களைச் சேர்ந்த 10 வீடியோ காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வீட்டிலேயே வசித்து வந்த குற்றவாளி, விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த வழக்கில், குற்றவியல் சட்டத்தின் 377D, 509 பிரிவுகளின் கீழ், அநாகரிகச் செயல், மரியாதை குலைக்கும் குற்றச்சாட்டுகளுக்காக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 13, 2026, 5:06 pm
மூன்று வாகனங்கள் மோதிய விபத்து: மூன்று ஆண்கள் உயிரிழப்பு
January 13, 2026, 4:51 pm
‘RON95’ எரிபொருள் மோசடி: சிங்கப்பூரர் கைது
January 13, 2026, 3:49 pm
போதைப்பொருள் கும்பலின் எச்சரிக்கை: புவேர்ட்டோ லோபஸில் ஐந்து தலைகள் வெட்டி தொங்கவிடப்பட்ட கொடூரம்
January 13, 2026, 2:08 pm
லஞ்சம் வாங்கிய போலிஸ் அதிகாரிக்கு 4 நாட்கள் ரிமாண்ட்
January 13, 2026, 1:33 pm
சரவாக்கை முன்மாதிரியாக கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி வழங்க வேண்டும்: டத்தோ முருகையா
January 13, 2026, 11:54 am
