நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள் கும்பலின் எச்சரிக்கை: புவேர்ட்டோ லோபஸில் ஐந்து தலைகள் வெட்டி தொங்கவிடப்பட்ட கொடூரம்

புவேர்ட்டோ லோபஸ்: 

ஈக்வடாரின் பிரபல சுற்றுலா கடற்கரையான புவேர்ட்டோ லோபஸில், ஐந்து மனிதத் தலைகள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையிலான வன்முறையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

போலீஸார் கூறுகையில், அந்த தலைகள் கடலின் எச்சரிக்கை பலகைக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்தன. இது, போதைப்பொருள் கும்பல்கள் அவர்களின் எதிரி கும்பல்களுக்கு அனுப்பப்பட்ட நேரடி எச்சரிக்கையாக நம்பப்படுகிறது.

ஈக்வடார், வட அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் கொகெய்ன் கடத்தப்படும் முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. உள்ளூர் மீனவர்களின் சிறிய படகுகளைக் கொண்டு போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2020 முதல் மனாபி பகுதியிலும், கடலோர பகுதியிலும் போதைப்பொருள் கும்பல் வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. 2025-ஆம் ஆண்டு மட்டும் 9,000-க்கும் மேற்பட்ட கொலைகள் பதிவாகி, ஈக்வடார் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான ஆண்டாக அமைந்துள்ளது.

ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா, உலகின் 70 சதவீத கொகெய்ன் வர்த்தகத்தை இந்த நாட்டின் வழியாக கட்டுப்படுத்தப்படுவதால், சர்வதேச போதைப்பொருள் கும்பல்களின் இலக்காக ஈக்வடார் மாறியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து நீடிக்கும் வன்முறையால், பிரிட்டன் அரசு, அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு மனாபி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

- கிரித்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset