செய்திகள் மலேசியா
சரவாக்கை முன்மாதிரியாக கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி வழங்க வேண்டும்: டத்தோ முருகையா
கோலாலம்பூர்:
சரவா மாநில அரசு சமீபத்தில் செயல்படுத்தியுள்ள முன்னேற்றமான முயற்சியை முன்மாதிரியாகக் கொண்டு, மலேசியா அரசு நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி வழங்க வேண்டும்.
மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா இதனை வலியுறுத்தினார்.
சரவா மாநிலம் முழுவதும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது பயன்பாட்டில் உள்ள பள்ளி பேருந்துகளை உடனடி மற்றும் நடைமுறைத் தீர்வாக அரசு பயன்படுத்த வேண்டும்.
இந்த முன்மொழிவின்கீழ், ஒவ்வொரு மாணவருக்குமான போக்குவரத்து செலவையும் அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், இதன் மூலம் பெற்றோர்களின் நிதிச் சுமையை குறையும்.
இந்த அணுகுமுறை மாணவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மட்டுமல்லாமல், பள்ளி பேருந்து இயக்குநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து, தொடர்ச்சியாக நிலைநிறுத்தவும் உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
குறிப்பாக, பள்ளி விடுமுறை காலங்களில் வருமான இழப்பை சந்திக்கும் இயக்குநர்களுக்கு இது பெரிதும் ஆதரவாக இருக்கும்.
மேலும், இலவச பள்ளி போக்குவரத்து திட்டம் காலை நேர போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு செல்லும் அவசரம், மன அழுத்தத்தைத் தணிக்கவும் உதவும்.
பள்ளி தொடங்கும் நேரத்திலும், பள்ளி முடியும் நேரத்திலும் பள்ளி வளாகங்களில் ஏற்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கூடுகையை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும்.
சரவாக் மாநில அரசு புதிய பேருந்துகளை வழங்கி இந்த முயற்சியை செயல்படுத்த முடிந்தால், ஏற்கனவே உள்ள வசதிகள் மற்றும் இயக்குநர்களைப் பயன்படுத்தி மாற்று முறையில் இதைச் செயல்படுத்த மத்திய அரசு முடியாதென்று கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை. இதற்கு தேவையானது உறுதியான அரசியல் மனப்பாங்கும் ஒருங்கிணைந்த நடவடிக்கையும் மட்டுமே.
எனவே, கல்வி அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் இணைந்து, முழுமையான, நிலைத்த, செயல்திறன் கொண்ட தேசிய அளவிலான செயல்படுத்தல் முறைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன் என்று அவர் கூறினார்.
-- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 13, 2026, 2:08 pm
லஞ்சம் வாங்கிய போலிஸ் அதிகாரிக்கு 4 நாட்கள் ரிமாண்ட்
January 13, 2026, 11:54 am
பப்ளிக் கோல்ட் நிறுவனம் 14 சிறந்த சாதனையாளர்களை 3 மில்லியன் ரிங்கிட் வெகுமதிகளுடன் கௌரவித்தது
January 13, 2026, 11:37 am
மலாக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஏற்ற ஹோட்டல்: சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது
January 13, 2026, 10:40 am
ஈரானின் வர்த்தக பங்காளிகள் 25 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டும்: டிரம்ப்
January 13, 2026, 10:39 am
மதத்தை தவறாக பயன்படுத்தும் தீவிரவாத கும்பல், போராளிகளை போலிஸ் கண்காணிக்கிறது: அயோப் கான்
January 13, 2026, 10:34 am
தஞ்சோங் செப்பாட்டில் இனி பன்றிகள் வளர்க்கப்படக் கூடாது: சிலாங்கூர் சுல்தான் உத்தரவு
January 13, 2026, 10:33 am
